Xiaomi Redmi K50 Pro எனும் ஸ்மார்ட்போனை ஷியோமி (Xiaomi) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல விசேடமான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக, இது அழகான, நேர்த்தியான வடிவத்தையும் கொண்டுள்ளது.
முதலில் இதன் திரை விபரங்களை பற்றி பார்த்தோமானால், இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட OLED திரையாகும். ஆகவே, ஸ்க்ரோல் செய்யும் போது மிக மிருதுவாக இருப்பதை நம்மால் உணர முடியும்.
மேலும், இதற்கு உலகின் முதன்மையான கண்ணாடியான கோர்னிங் கொரில்லா கண்ணாடி விக்டஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திரைக்கு உச்சக்கட்ட பாதுகாப்பை இந்த ஸ்மார்ட்போனிற்கு வழங்கியுள்ளார்கள்.
அத்துடன், இது தூசி உட்புகாதவாறும், நீர் விசிரியடிப்பிலிருந்து பாதுகாப்பானதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ரொய்ட் 12 இல் இயக்குகிறது. இதற்கு மீடியாடெக் டைமென்சிடி 9000 எனும் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாலி-ஜீ710 எம்சி10 எனும் வரைகலை செயலாக்க அலகும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு ஸ்னாப்ட்ராகன் சிப்செட் பொருத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இனி இந்த போனின் கெமரா பற்றி பார்க்கலாம். இதற்கு பின் பக்கத்தில் 3 கெமராக்கள் பொருத்தியுள்ளார்கள்.
அந்தவகையில் பிரதான கெமராவாக 108MP கெமரா பொருத்தப்பட்டுள்ளது. அதனுடன், சேர்த்து 8MP இல் அல்ட்ராவைட் கெமராவும் 2MP இல் மெக்ரோ கெமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், செல்பி கெமராவாக இதற்கு 20MP கொண்ட கெமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 8GB, 12GB ரேம் தெரிவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பொருந்தும் வகையில் 128GB, 256GB, 512GB ஆகிய அளவுள்ள சேமிப்பகங்களில் இது வெளியாகியுள்ளது.
உங்களுக்கு தேவையான தெரிவுகளில் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை பெற முடியும்.
Xiaomi Redmi K50 Pro இற்கு 5000mAh அளவுடன் கூடிய மின்கலம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் விரைவு மின்னூட்டல் வசதியின் மூலம் 19 நிமிடங்களில் 100% மின்னூட்ட முடியும்.
Xiaomi Redmi K50 Pro இன் முழு விபரங்கள்
திரை (Display)
வகை | OLED, HDR10+ |
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) | 120Hz |
நிட்ஸ் (Nits) | 1200 Maximum |
அளவு | 6.67 inches |
பிரிதிறன் (Resolution) | 1440×3200 Pixels, 20:9 Ratio |
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) | 526 |
பாதுகாப்பு | Corning Gorilla Glass Victus |
Xiaomi Redmi K50 Pro இன் அமைப்பு விபரங்கள்
நீளம் | 163.1mm (6.42 inches) |
அகலம் | 76.2mm (3.00 inches) |
உயரம் | 8.5mm (0.33 inch) |
நிறை | 201g |
கட்டுமானப் பொருள் | Front – Corning Gorilla Glass Victus, Back – Glass |
பாதுகாப்பு | IP53 Dust and Splash Resistant |
தளம்
இயக்க முறைமை (Operating System) | Android 12 |
பயனர் இடைமுகம் (User Interface) | MIUI 13 |
சிப்செட் (Chipset) | MediaTek Dimensity 9000 (4nm) |
செயலி (Processor) | Octa-core (1×3.05GHz Cortex-X2 & 3×2.85GHz Cortex-A710 &
4×1.80GHz Cortex-A510) |
வரைகலை செயலாக்க அலகு (GPU) | Mali-G710 MC10 |
பின் பக்க கெமரா
கெமரா | 108MP (Wide), 1/1.52”, 0.7µm, Phase Detection Autofocus,
Optical Image Stabilization |
8MP, 1190 (Ultrawide) | |
2MP, f/2.4 (Macro) | |
சிறப்பம்சங்கள் | Dual-LED Dual-tone Flash, HDR, Panorama |
வீடியோ | 4K – 30fps, 1080p – 30/60/120fps, 720p – 960fps,
Gyro-Electronic Image Stabilization |
முன் பக்க கெமரா
கெமரா | 20MP (Wide) |
வீடியோ | 1080p – 30/120fps |
ஒலி (Sound)
ஒலிபரப்பி (Loudspeaker) | Yes, Stereo Speakers |
3.5mm ஜெக் (Jack) | No |
விபரம் | 24-bit/192kHz Audio |
Xiaomi Redmi K50 Pro இன் சிறப்பம்சங்கள்
உணரிகள் (Sensors) | Fingerprint (Side-mounted), Gyroscope, Accelerometer,
Compass, Proximity, Color Spectrum |
நினைவகம் (Memory)
ரேம் | 8GB, 12GB |
சேமிப்பகம் | 128GB, 256GB, 512GB |
Universal Flash Storage 3.1 | |
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) | No |
மின்கலம் (Battery)
வகை | Li-Po 5000mAh, non-removable |
மின்னூட்டம் (Charge) | Fast charging 120W, 100% just in 19 minutes |
Power Delivery 3.0 | |
Quick Charge 3+ |
வலையமைப்பு
தொழினுட்பம் | GSM/CDMA/HSPA/CDMA2000/LTE/5G |
2ஜி பேண்ட்கள் (2G Bands) | GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2 |
CDMA 800 | |
3ஜி பேண்ட்கள் (3G Bands) | HSDPA 850/900/1700 (AWS) 1900/2100 |
CDMA2000 1x | |
4ஜி பேண்ட்கள் (4G Bands) | 1, 2, 3, 4, 5, 7, 8, 18, 19, 26, 34, 38, 39, 40, 41, 42 |
5ஜி பேண்ட்கள் (5G Bands) | 1, 3, 5, 8, 28, 38, 40, 41, 77, 78 SA/NSA |
வேகம் | HSPA 42.2/5.76Mbps, LTE-A, 5G |
இணைப்புகள்
வைஃபை (Wi-Fi) | Wi-Fi 802.11 a/b/g/n/ac/6, Dual-band, Wi-Fi Direct, Hotspot |
புளூடூத் (Bluetooth) | 5.3, A2DP, LE |
ஜிபிஎஸ் (GPS) | GPS, A-GPS, GLONASS, Galileo, BDS, QZSS, NavIC |
என்எஃப்சி (NFC) | Yes |
இன்ஃப்ராரெட் போர்ட் (Infrared Port) | Yes |
யூஎஸ்பி (USB) | USB Type-C 2.0, USB On-The-Go |
Xiaomi Redmi K50 Pro இன் பொதுவான அம்சங்கள்
Sim | Dual Sim (Nano–Sim, Dual Stand-by) |
Colors | Black, Gray, Blue, Green |
வானொலி (Radio) | No |
Xiaomi Redmi K50 Pro இன் வெளியீடு
அறிவித்த திகதி | 17 March 2022 |
வெளியான திகதி | 22 March 2022 |
இதையும் வாசிக்க:
- Xiaomi Poco M4 Pro இன் முழு விபரங்கள்
- Xiaomi Redmi Note 11 இன் முழு விபரங்கள்
- Xiaomi Redmi Note 11 Pro இன் முழு விபரங்கள்
- Xiaomi Redmi Note 11 Pro 5G இன் முழு விபரங்கள்
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com