உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒரு இயற்கை வளம் காற்று (Air in Tamil) ஆகும். காற்று நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் கூட நாம் அனைவரும் அதன் மூலமாகவே இந்த பூமியில் உயிர் வாழ்கிறோம்.
நாம் மட்டுமன்றி, புவியில் உள்ள எல்லா ஜீவராசிகளும் இந்த காற்றை சுவாசித்தே வாழ்கின்றன. காற்றின் முதன்மையான முக்கியத்தை பற்றி சொல்ல இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை.
உலகில் காற்று இல்லாத இடம் ஒன்று உண்டு என்று நாம் இதுவரை கேள்விபட்டதே இல்லை. அப்படி பார்க்கும் பொழுது, உலகம் முழுவதும் இந்த காற்று நிறைந்திருக்கிறது.
காற்று என்றால் என்ன (What is air in Tamil) என்று இனி விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.
காற்று என்றால் என்ன?
காற்று என்பது என்னவெனில், வளிமங்களானது பெருமளவில் சேர்ந்து ஒரு இடத்திலுருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் நிலையினையே குறிக்கும். இந்த பூமியை பொருத்தமட்டில் வளிமண்டலத்திலே உள்ள வளிமமானது பாரியளவில் நகர்ந்து செல்வது காற்று எனப்படுகிறது.
தட்பவெப்பவியல் அடிப்படையில் காற்றுக்களை அதன் வலு, எந்த திசையிலிருந்து வீசுகின்றது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்துவர்.
குறைந்தளவு நேரம் நிலைத்து நிற்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று வன்காற்று எனப்படும். கிட்டத்தட்ட ஒரு நிமிடம் போன்ற இடைத்தரக் கால அளவிற்குள் வீசும் பலமான காற்று பாய்புயல் எனப்படும்.
இவ்வாறு நெடிய நேரம் பலமாக வீசும் காற்றானது புயல், சூறாவளி போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
வளிமண்டலத்திலுள்ள காற்றின் கூறுகள்
வாயு | சதவீதம் (%) |
நைதரசன் | 78.09 |
ஒட்சிசன் | 20.95 |
ஆர்கன் | 0.93 |
காபனீரொட்சைட்டு | 0.03 |
காற்று வேறு பெயர்கள்
- வளி
- வாயு
- ஊதை
- அசிரம்
- அனிலம்
- வங்கூழ்
- சதாகதி
- கூதிர்
- மாருதம்
- சதீலம்
- கூதை
- உலவை
- ஆலி
- நீழல்
- மருத்து
காற்றின் வகைகள்
திசைகள் அடிப்படையில் காற்றின் வகைகள்
- வாடை: வடக்குத் திசையிலிருந்து வீசும் காற்று
- கொண்டல்: கிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்று
- தென்றல்: தெற்குத் திசையிலிருந்து வீசும் காற்று
- கச்சான்: மேற்குத் திசையிலிருந்து வீசும் காற்று
வேகத்தின் அடிப்படையில் காற்றின் வகைகள்
- மென்காற்று: மணித்தியாலத்திற்கு 6km வேகத்தில் வீசும் காற்று மென்காற்று ஆகும்.
- இளந்தென்றல் காற்று: மணித்தியாலத்திற்கு 6km – 11km வரை வேகத்தில் வீசுகின்ற காற்றாகும்.
- தென்றல் காற்று: மணித்தியாலத்திற்கு 12km – 19km வரை வேகத்தில் தென்றல் காற்று என அழைக்கப்படுகிறது.
- புழுதிக் காற்று: மணித்தியாலத்திற்கு 20km – 29km வரை வேகத்தில் வீசும் காற்றாகும்.
- ஆடிக் காற்று: மணித்தியாலத்திற்கு 30km – 39km வரை வேகத்தில் வீசும் காற்று ஆடிக் காற்று என அழைக்கப்படுகிறது.
- கடுங்காற்று: மணித்தியாலத்திற்கு 100km வேகத்தில் வீசும் காற்று இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- புயல் காற்று: மணித்தியாலத்திற்கு 101km – 120km வரை வேகத்தில் வீசக்கூடிய காற்றாகும்.
- சூறாவளிக் காற்று: மணித்தியாலத்திற்கு 120km வேகத்தில் வீசுகின்ற காற்று ஆகும்.
காற்றின் முக்கியத்துவம்
காற்று இன்றி அமையாது இவ்வுலகு என்பதற்கு இணங்க உலக உயிர் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது காற்றாகும்.
மனிதன், தாவரங்கள், பறவைகள், மிருகங்கள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்தும் உயிர் வாழ்வதற்கு காற்று இன்றியமையாதது.
இவ்வாறு பயன்பாடுகளை ஒவ்வொன்றாக பார்ப்பின்,
சுவாசத்திற்கு காற்று இன்றியமையாதது
தாவரங்களின் சுவாசத்திற்கு காபனீரொட்சைட்டும் (CO2) ஏனைய உயிர்களின் சுவாசத்திற்கு ஒட்சிசனும் (O2) முக்கியமானது.
படகு கப்பல் போக்குவரத்துக்கு காற்று முக்கியமான காரணியாகும்
படகு கப்பல் போக்குவரத்தின் போது ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு பயணிப்பதற்கு படகு கப்பல்களை வழி நடத்துவது காற்றாகும்.
உலர்த்தும் தேவைகளுக்கு பயன்படுதல்
ஆடைகள், பொருட்கள், வர்ணப் பூச்சிகள், வத்தல் போன்ற பல பொருட்களை உலர்த்துவதற்கு காற்று (Air in Tamil) அவசியமாகின்றது.
எரிப்புச் செயற்பாடுகளுக்கு பயன்படல்
சூலைகள், சமையல் தேவைகள் போன்ற செயற்பாடுகளுக்கு காற்று (Air in Tamil) பயன்படுகிறது.
வித்துப் பரம்பலுக்கு உதவுதல்
வித்துக்களானது காய்ந்து வெடித்து சிதறி காற்று வீசும் திசையில் பரவலாக்கப்பட்டு பல்வேறு திசைகளில் வீசப்பட்டு தாவரங்கள் பல பிரதேசங்களில் பரவி வளர்கின்றன.
இத்தகைய வித்துப் பரம்பலுக்கு காற்றின் துணை அவசியமாகின்றமை குறிப்பிடவல்லது.
விமானம், வானூர்தி மற்றும் பலூன் போக்குவரத்திற்கு தேவைப்படுதல்
வான்வழிப் போக்குவரத்தின் போது பறக்கும் வாகனங்களின் என்ஜின்களின் மூலம் காற்றானது பின் நோக்கி தள்ளப்படும் போது வாகனமானது முன் நோக்கி பறக்கிறது.
இதனடிப்படையில், துரிதமாக ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வதற்கும் பொருட்களை கொண்டு செல்வதற்குமான வான்வழிப் போக்குவரத்திற்கு காற்று (Air in Tamil) மிக மிக அத்தியாவசியமானதொன்றாகும்.
பறவைகள் பறப்பதற்கு காற்று முக்கியமாதல்
பறவைகள் பறக்கும் போது அவை தனது இறக்கைகள் மற்றும் சிறகுகளின் மூலம் காற்றை தள்ளி மேல் நோக்கியும் முன் நோக்கியும் பறக்கின்றன.
மின் உற்பத்தி செயற்பாடுகளுக்கு காற்று தேவைப்படல்
காற்றாலைகளில் விசிறியானது காற்றின் மூலம் சுழல்வதால் தான் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்போது விசிரிகளின் சுழற்சிக்கு காற்று முக்கியத்துவம் பெறுகிறது.
வெப்பம் மற்றும் குளிரை சமநிலையில் வைத்திருத்தல்
வளிமண்டலத்தில் வெப்பம் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து அவை குறைவாக இருக்கும் இடத்திற்கு காற்றின் மூலம் வெப்பம் அல்லது குளிர் கடத்தப்படுகிறது.
அதாவது, இச்சந்தர்ப்பத்தில் காற்றானது ஒரு கடத்தியாக தொழிற்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் வெப்பத்தையும் குளிரையும் சமநிலையில் பேணுகின்றமை காற்றின் இன்னோரன்ன செயற்பாடாகும்.
தாவரங்களில் ஒளித்தொகுப்பிற்கு பயன்படல்
தாவரங்களின் உணவுத் தயாரிப்பு செயற்பாடு ஒளித்தொகுப்பு என்றழைக்கப்படும். இத்தகைய ஒளித்தொகுப்பு முறைக்கு காற்றின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது.
காற்றின் தீமைகள்
பலமான காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்தல்
பலத்த காற்று, காற்றுடன் கூடிய மழையின் போது மரங்கள் முறிந்து வீழ்ந்து குடியிருப்புகள், கட்டிடங்களின் கூரைகள், கண்ணாடி ஜன்னல் கதவுகள் என்பன சேதமடைதல், உயிர் பலி ஏற்படுதல் என்பன குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி பலத்த காற்று (புயல், சூறாவளி போன்றன) காரணமாக பாரிய மரங்கள் வீழ்வதால் பாதை போக்குவரத்தும் தடைப்படும்.
அதேவேளை, மின் கம்பங்கள் சேதமடைந்து மின் இணைப்புக்கள் அறுந்து மின்சார துண்டிப்புகள் ஏற்படுகின்றமையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
காட்டுத் தீ பரவல்
அதிக வெப்ப காலங்களில் வெப்பம் காரணமாக காடுகளில் உண்டாகும் தீயோ அல்லது மனிதனால் ஏற்படுத்தப்படும் நெருப்போ காற்று காரணமாக பாரிய இடங்களுக்கு பரவலாக்கப்படுகின்றமை இன்னோரன்ன பாதிப்பாகும்.
வான்வழிப் போக்குவரத்தில் ஆபத்துக்கள் ஏற்படல்
காற்றினால் ஏற்படும் சீரற்ற மற்றும் மோசமான காலநிலையினால் விமானங்கள், வானூர்திகள் பறப்பதில் சிரமமும் ஆபத்தும் ஏற்படுதல் ஓர் விளைவாகும்.
காற்று மாசுபடல்
வாகனப் புகை, துர்நாற்றங்கள், வெடிப்புக்களால் ஏற்படும் புகை, தூசு துணிக்கைகள் என்பன காற்றில் கலப்பதனால், காற்று மாசுபாடு ஏற்பட்டு பல்வேறு பக்கவிளைவுகளை தோற்றுவிப்பது நோக்கத்தக்கது.
அத்துடன், ஓசோன் படையும் வளிமணடலத்துக்கு தீங்கான வாயுக்களால் சிதைவடைகிறது.
அதிகப்படியான நைதரசன் ஆக்சைட்டுகள், குளோரோ புளோரோ காபன் (CFC), தீயனைப்பான் போன்றவற்றால் வெளிவரும் வாயு என்பனவற்றால் ஓசோன் படை மண்டலம் சிதைவடைந்து புற ஊதாக் கதிர் தாக்கம் பூமியில் ஏற்படும்.
மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் விளைவுகள்
- கண் எரிச்சல்
- தலைவலி
- தொண்டைவலி
- காய்ச்சல்
- காசநோய்
- ஆஸ்துமா
- சுவாசக் கோளாறு
- நுரையீரல் அலர்ஜி
- நுரையீரல் புற்றுநோய்
காற்று என்பது உயிர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளம் என்று நாம் பாத்தோம். காற்று என்றால் என்ன (What is air in Tamil) என்பது பற்றியும் நன்கு அறிந்துகொண்டோம். காற்று இல்லையேல் இந்த உலகமே இல்லை என்று தான் அர்த்தம்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காற்றை நாம் எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். காற்றை எவ்வாறு சுத்தமாக்குவது என்றால், காற்றை இயற்கையாக சுத்திகரிப்பதற்கு சிறந்த வழி மரங்களை வளர்ப்பது தான்.
இதையும் வாசிக்க:
அதற்காக நாம் அனைவரும் தொடர்ந்து மரங்களை வளர்ப்போம்; இயற்கையை பாதுகாப்போம். முடிந்தவரை வளிமண்டலத்திற்கு பாதிப்பு வரும் வகையில் உள்ள செயற்கையான இரசாயணப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம்.
சுத்தமான காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக வாழ்வோமாக.
மேலும் பயனுள்ள சில தகவல்களையும் வாசிப்போம்:
- பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
- ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com