Vivo iQOO 9 – Full Smartphone Features

Vivo iQOO 9

விவோவின் (Vivo) துணை நிறுவனமான ஐக்யூ (iQOO) தனது புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Vivo iQOO 9 எனப்படும் இந்த ஸ்மார்ட்போனானது மிக வேகமாக இயங்கக்கூடிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இந்த போனை பற்றி இனி முழுமையாக பார்க்கலாம். முதலில் இதன் திரை பற்றிய விபரங்களை பார்ப்போம். இது ஒரு AMOLED திரையாகும். 6.56 அங்குலங்களை கொண்ட இந்த திரையானது 120Hz புதுப்பிப்பு விகிதத்தினை கொண்டுள்ளது.

இதன் மூலம் தடையின்றி இலகுவாக ஸ்க்ரோல் (Scroll) செய்யக்கூடியதாக இருக்கும். அதிகமாக சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர்க்கு இது சிறந்த தீர்வாக அமையும்.

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் திரையானது 16 மில்லியன் வர்ணங்களை காட்சிபடுத்தக்கூடியது. எனினும் இந்த ஸ்மார்ட்போனின் திரை 1.07 பில்லியன் வர்ணங்களை காண்பிக்கக்கூடிய சிறந்த ஒரு திரையாகும்.

இது சாதாரண திரையை விட 64 மடங்கு அதிகமான வர்ணங்களை காட்டக்கூடியது.

இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ரொய்ட் 12 இனை அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் 12 இயங்கு தளத்தில் இயங்குகிறது. இது பலவகையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

Vivo iQOO 9 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ராகன் 888+ 5G எனும் மிக வேகமான சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அத்தோடு, அட்ரினோ 660 என்கிற வரைகலை செயலாக்க அலகு இதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது விசேடமாக கேமிங்க்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆம்! இதற்காக வழங்கப்பட்டுள்ள சிப் ஆனது உயர்ந்த எஃப்பீஎஸ் (FPS) இனை அடைவதனால் மென்மையான காட்சிப் படத்தை பெறுகிறது.

போனின் அடிப்பக்கத்திலுள்ள பெரிய குளிராக்கும் தகடினால் வெப்பச் சிதறல் ஏற்பட்டு மிகச் சிறிய குழாய் நாளங்கலினால் வெப்பம் சீக்கிரமாகவும் சமமாகவும் நீக்கப்படுகிறது.

மேலும், திரையில் வலது மற்றும் இடது பக்கங்களில் வேறு வேறான உணரிகள் இருப்பதனால் கேம்ஸ் (Games) விளையாடும் போது இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

அத்தோடு 300Hz தொடு மாதிரி விகிதத்துடனும் (Touch Sampling Rate) 1000Hz உடனடி தொடு மாதிரி விகிதத்துடனும் (Instant Touch Sampling Rate) இந்த போனானது இயங்குவதால் மிகத்துல்லியமாகவும் உடனடியாகவும் எதிர்செயலை பெறமுடியும்.

இனி இந்த ஸ்மார்ட்போனின் கெமராக்களை பற்றி பார்க்கலாம். Vivo iQOO 9 ஆனது பின் பக்கத்தில் 3 கெமராக்களை கொண்டிருக்கிறது. பிரதான கெமரா 48MP இனை கொண்டிருக்கிறது.

மேலும், தலா 13MP இனை கொண்ட 2 கெமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கெமராக்கள் மூலம் மங்கல் இல்லாத தெளிவான புகைப்படங்களை பெறமுடியும்.

அத்துடன், இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழினுட்பங்களினால் (OIS with EIS) அசையும் நிலையிலும் உறுதியான வீடியோக்களை பெற முடியும்.

அத்தோடு, இரவு வேளையிலும் வெளிச்சம் குறைவான இடங்களிலும் மிகச் சிறந்த வீடியோக்களை பதிவு செய்யமுடியும். இவற்றில் 4K தரத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் 16MP அளவுள்ள முன் பக்க கெமரா பொருத்தப்பட்டுள்ளது.

128GB, 256GB சேமிப்பகங்களில் வெளியாகும் இந்த போன் 8GB, 12GB ரேம்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு சிறிய குறையும் உள்ளது. அது என்னவென்றால், இந்த போனின் மின்கலம் தான்.

காரணம் இதற்கு 4350mAh கொண்ட லிதிய மின்கலம் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆகவே பயன்படுத்தக்கூடிய நேரம் சற்று குறைவாக தான் இருக்கும்.

எனினும், 120W இல் மிக விரைவாக மின்னூட்டக்கூடிய வசதியை இந்த போன் தயாரிப்பாளர்கள் வழங்கியுள்ளார்கள். ஆம்! அத்துடன், 6 நிமிடங்களில் 50% மின்னூட்ட முடியும். மேலும், 18 நிமிடங்களில் 100% மின்னூட்ட முடியும்.

Vivo iQOO 9
Vivo iQOO 9

 

Vivo iQOO 9 இன் முழு விபரங்கள்

திரை (Display)

வகை AMOLED, 1.07 Billion Colors, HDR10+
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 120Hz
நிட்ஸ் (Nits) 1200 (Maximum)
அளவு 6.56 inches
பிரிதிறன் (Resolution) 1080×2376 Pixels
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) 398ppi
பாதுகாப்பு Panda Glass

 

Vivo iQOO 9 இன் அமைப்பு விபரங்கள்

நீளம் 159.1mm (6.26 inches)
அகலம் 75.1mm (2.95 inches)
உயரம் 8.6mm (0.33 inches)
நிறை 200g
கட்டுமானப் பொருள் Not mentioned
பாதுகாப்பு Splash and dust resistant

 

தளம்

இயக்க முறைமை (Operating System) Android 12, Funtouch 12
பயனர் இடைமுகம் (User Interface) Not mentioned
சிப்செட் (Chipset) Qualcomm SM8350 Snapdragon 888+ 5G (5nm)
செயலி (Processor) Octa-core (1×2.99GHz Kyro 680 & 3×2.42GHz Kyro 680 &

4×1.80GHz Kyro 680)

வரைகலை செயலாக்க அலகு (GPU) Adreno 660

 

பின் பக்க கெமரா

கெமரா 48MP, f/1.8, 25mm (Wide), 1/2.0”, 0.8µm, Phase Detection

Autofocus, Gimbal Optical Image Stabilization

13MP, f/2.5, 50mm (Telephoto), Phase Detection Autofocus,

2x Optical Zoom

13MP, f/2.2, 16mm, 1200 (Ultrawide)
சிறப்பம்சங்கள் Dual LED, Dual Tone Flash, HDR, Panorama
வீடியோ 4K – 30fps, 1080p – 30fps

 

முன் பக்க கெமரா

கெமரா 16MP, f/2.5, (Wide), 1/3.1”, 1.0µm
சிறப்பம்சங்கள் HDR
வீடியோ 1080p – 30fps

 

ஒலி (Sound)

ஒலிபரப்பி (Loudspeaker) Yes, with stereo speakers
3.5mm ஜெக் (Jack) Not mentioned
விபரம் 24-bit/192kHz Audio

 

Vivo iQOO 9 இன் சிறப்பம்சங்கள்

உணரிகள் (Sensors) Fingerprint (In-Display), Gyroscope, Accelerometer, Proximity,

Compass, Ambient Light

 

நினைவகம் (Memory)

ரேம் 8GB, 12GB
சேமிப்பகம் 128GB, 256GB
Universal Flash Storage (UFS) 3.1
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) No

 

மின்கலம் (Battery)

வகை Li-Po 4350mAh, non-removable
மின்னூட்டம் (Charge) Fast charging 120W
50% in just 6 minutes, 100% in 18 minutes

 

வலையமைப்பு

தொழிநுட்பம் GSM/HSPA/LTE/5G
2ஜி பேண்ட்கள் (2G Bands) GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2
3ஜி பேண்ட்கள் (3G Bands) HSDPA 850/900/1700 (AWS) 1900/2100
4ஜி பேண்ட்கள் (4G Bands) 1, 2, 3, 4, 5, 7, 8, 12, 17, 18, 19, 20, 25, 26, 28, 34, 38, 39, 40, 41
5ஜி பேண்ட்கள் (5G Bands) 1, 3, 5, 8, 28, 41, 77, 78 SA/NSA
வேகம் HSPA 42.2/5.76Mbps, LTE-A, 5G

 

இணைப்புகள்

வைஃபை (Wi-Fi) Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dual-band, Wi-Fi Direct- Hotspot
புளூடூத் (Bluetooth) 5.2, A2DP, LE
ஜிபிஎஸ் (GPS) GPS, A-GPS, GLONASS
என்எஃப்சி (NFC) Yes
யூஎஸ்பி (USB) USB Type-C 2.0

 

Vivo iQOO 9 இன் பொதுவான அம்சங்கள்

Sim Dual Sim (Nano Sim, Dual stand-by)
Colors Legend, Alpha, Phoenix
வானொலி (Radio) No

 

Vivo iQOO 9 இன் வெளியீடு

அறிவித்த திகதி 23 February 2022
வெளியான திகதி 02 March 2022

 

இதையும் வாசிக்க: 

 

இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top