சுவாமி விபுலானந்தர் வாழ்க்கை வரலாறு | Swami Vipulananda History in Tamil

Swami Vipulananda History in Tamil

இலங்கையில் பிறந்து வளர்ந்து தமிழுக்கு பெருந்தொண்டாற்றி தமிழை வளர்த்தெடுத்த பெரியார்களுல் முத்தமிழ் வித்தகரான சுவாமி விபுலானந்தரும் ஒருவர் ஆவார்.

இவரும் ஏராளமான பணிகளை தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றியுள்ளார். அத்தோடு, உலகின் முதல் தமிழ் பேராசிரியர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாம், சுவாமி விபுலானந்தர் வாழ்க்கை வரலாறு (Swami Vipulananda History in Tamil) பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

பிறப்பு

 சுவாமி விபுலானந்தர் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் காரைத்தீவில் 1892 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சாமித்தம்பி, தாயார் பெயர் கண்ணம்மா. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மயில்வாகனன் என்பதாகும்.

கல்வி

மயில்வாகனன் தன் முதல் கல்வியை குஞ்சிதம்பி ஆசிரியர் மற்றும் வசந்தராசப்பிள்ளை அவர்களிடமும் கற்கலானார். அத்துடன், வைத்தியலிங்க தேசிகரிடம் நன்னூல்,சூடாமணி, நிகண்டு என்பவற்றயும் கற்றிக் கொண்டார்.

இவரது ஆரம்ப பள்ளிக் கல்வியானது கல்முனை மெதமெடிஸ் ஆங்கில பள்ளியிலும், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் கற்பிக்கப்பட்டது. பின், 16 ஆம் வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் சித்தியடைந்த இவர் மைக்கல் கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் சேவை செய்தார்.

அதைத்தொடர்ந்து, கொழும்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார். அதுமட்டுமன்றி, அங்கு விரிவுரையாளராக கடமை புரிந்த தென்கோவை கந்தையா பிள்ளை என்பவரிடம் பண்டைத் தமிழ் இலக்கியத்தை கற்றார்.

1912 ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலிருந்து வெளியேறினார். அதை தொடர்ந்து, புனித மைக்கல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக சேவை ஆற்றினார்.

1915 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள அரசு தொழில் நுட்பக்கல்லூரியில் விஞ்ஞானத்தை கற்றார். 1916 இல் அறிவியல் பட்டத்தையும் பெற்றார்.

மேலும், மதுரை தமிழ் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்றதோடு, பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையில் பண்டிதர் பட்டம் பெற்ற முதலாமவர் இவராவார்.

கல்விப்பணி அல்லது ஆசிரியப்பணி

இவர் அறிவியல் பட்டத்தை பெற்ற பின் அதே தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணிபுரிந்தார். இவரது விரிவுரைகள் மாணவர்கள் மத்தியில் பாரிய வரவேற்பையும் சிறப்பையும் பெற்றன.

1917 ஆம் ஆண்டு யாழ்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைக்கப்பட்டார். அவ்வழைப்பை விபுலானந்தரும் மனதார ஏற்றுக் கொண்டார்.

1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழக BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். இதன் பின், இவரது மொழிப்புலமை மற்றும் திறமைகளை அறிந்து மானிப்பாய் இந்து கல்லூரி முகாமையாளரான திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்கி அக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்று பணியாற்றினார்.

1925 ஆம் அண்டில் திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரியில் முகாமையாளராக சுவாமி விபுலானந்தர் கடமை புரிந்தார். பின், கல்லூரியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வண்ணம் 1928 ஆம் ஆண்டு அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

அத்துடன், 1926 இல் இருந்து 1930 வரை திருகோணமலையில் இருந்தவாறே யாழ் இராமகிருஸ்ணமிஷன் வைத்தீஸ்வர வித்தியாலய முகாமையாளராகவும் சேவையாற்றினார்.

தமிழ் பணிகள்

சுவாமி விபுலானந்தர் தோன்றிய காலமானது ஆங்கிலேயர் ஆட்சி தலைத்தூக்கி இருந்த காலமாகையால், இம்மண்ணினது தமிழ் கலாசாரம், பண்பாடு, சமயம், கல்வி போன்றன அவரால் ஆங்கில மோகத்தால் அழியாமல் பாதுகாக்கப்பட்டு புத்துயிர் கொடுத்து தலைத்தோங்க செய்யப்பட்டது.

மேலும், தமிழ் நாட்டிற்கு சென்று மதுரை தமிழ் சங்கம், கரந்தை தமிழ் சங்கம், கலைச்சொல் ஆராய்ச்சி கழகம் போன்றன நிகழ்த்திய விழாக்களில் பல தலைமையுரைகளை ஆற்றி அவற்றை சிறந்த ஆராய்ச்சியுரைகளாக விளங்கச் செய்தார்.

அத்துடன், பல நூல்கலையும், செய்யுள்களையும் தமிழில் அருளினார். மேலும், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் என்பவற்றையும் தந்தருளியமை எடுத்துக் காட்டத்தக்கது.

அருளிய நூல்கள்

  • யாழ் நூல் – இசைத்தமிழ் ஆராய்ச்சி நூல்
  • மதங்கசூளாமணி – நாடகத்தமிழ் நூல்
  • வங்கியம்
  • சங்கீதபாரிஜாதகம்
  • பாரிஜாதக வீணை

சிறுபிரபந்தங்கள்

  • கணேச பஞ்சதோத்திர பஞ்சகம்
  • கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலை
  • சுப்பிரமணிய சுவாமிகள் இரட்டை மணிமாலை

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • சுவாமி விவேகானந்தர் சம்பாவிணைகள்
  • விவேகானந்த ஞானதீபம்
  • கரும யோகம்
  • ஞான யோகம்
  • நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை
  • ஆங்கிலவாணி – கவிதைகள்
  • சாரல் மழை – ஷேக்ஸ்பியரின் Tempest

 கட்டுரைகள்

  • பயனற்ற கல்வி
  • பயனுள்ள கல்வி
  • புதிய கல்வி திட்டத்திற்கு ஆதரவு
  • லகர எழுத்து
  • சோழ மண்டலமும் ஈழ மண்டலமும்
  • கலைச்சொல்லாக்கம்
  • யவனபுரத்து கலைச்செல்வம்
  • ஐயமும் அழகும்

பக்தி நூல்கள்

  • நடராஜ வடிவம்
  • தில்லை திருநடனம்

ஆங்கில கட்டுரைகள்

  • The phonetics of Tamil
  • The gift of tongues
  • An essay on the study of language

துறவற வாழ்வு

சுவாமி விபுலானந்தர் வாழ்க்கை வரலாறு (Swami Vipulananda Biography in Tamil) பற்றிய இப்பதிவில் அடுத்து அவரின் துறவற வாழ்க்கை எவ்வாறு இருந்தது என பார்ப்போம்.

மயில்வாகனருக்கு சுவாமி விபுலானந்தர் என்ற பெயரைக் கொடுத்தது இவரது துறவறம் ஆகும். என்னதான் தமிழ் பணி, சமூக பணி, சமயப் பணி என்று வாழ்க்கையை நடத்தினாலும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக இவரது மனதில் துறவறம் என்ற ஒன்று வளர்ந்துக் கொண்டே சென்றது.

1916 ஆம் ஆண்டு யாழ்ப்பாண ஆனைபந்தியில் தன் வீட்டில் விவேகானந்த சபையை தொடங்கினார். இச்சபையின் தூண்டுதலால் யாழில் இராமகிருஸ்ண மடம் நலிவுற்ற போது வைத்தீஸ்வரர் வித்தியாலத்தை ஏற்று நடத்தினார்.

1922 ஆம் ஆண்டு இராமகிருஸ்ண மிஷனில் இணைந்தார். சென்னை மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சர்வானந்தர் என்பவரால் பிரபோத சைதன்யர் எனும் பெயருடன் பிரம்மச்சரிய தீட்சையும், சன்னியாச தீட்சையும் பெற்றார். சுமார் இரு வருடங்கள் அங்கு கற்றார்.

1924 ஆம் வருடம் சித்திரை மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று விவேகானந்தர் மாணவரான சுவாமி சிவானந்தரிடம் இருந்து துறவு பெற்றுக் கொண்டார். இதனால், சுவாமி சிவானந்தரால் மயில்வாகனருக்கு சுவாமி விபுலானந்தர் என்ற துறவுப் பெயரும் வழங்கப்பட்டது.

பின்னர், ஈழம் திரும்பி இராமகிருஸ்ண மிஷன் மேற்கொள்கின்ற கல்விப்பணி செயற்பாடுகளை ஒருங்கமைத்தார். சைவ சித்தாந்தியாக இருந்த விபுலாநந்தர் பிறகு முழு வேதாந்தியாக மாறினார்.

மேலும், தான் கற்பிக்கின்ற வகுப்புகளில் எல்லோருக்கும் ஒரே உணவு, ஒரே இருக்கை எனும் கொள்கையை நடைமுறைப் படுத்தினார்.

இலங்கை மக்களுக்கு இவர் செய்த பணிகளை பாராட்டி இலங்கை அரசானது தேசிய வீரர் வரிசையில் ஒருவராக விபுலானந்தரையும் சேர்த்துள்ளது.

அத்தோடு, நம் நாட்டிலுள்ள பாடசாலைகள் வாயிலாக கொண்டாடப்படுகின்ற அகில இலங்கை தமிழ் மொழி தினம் விபுலானந்தரது மறைவு நாளை நினைவு கூறும் விதமாக அமைகின்றது.

இறப்பு

சுவாமி விபுலானந்தர் 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி சனிக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். இவர் இறக்கும் தருனம் உடல் நலம் குன்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவுரை: சுவாமி விபுலானந்தர் வாழ்க்கை வரலாறு (Swami Vipulananda History in Tamil)

இவ்வாறு இலங்கைத்திரு நாட்டில் தோன்றி தமிழ், சமயம், கலாச்சாரம் என அனைத்திற்கும் அளப்பரிய சேவைகளை ஆற்றி சமூகத்திற்கு நல்வழி காட்டிய பெரியாரான சுவாமி விபுலானந்தரின் பெருமையை போற்றிப்புகழ்ந்து , அவரை பற்றியும் அவரின் பணிகள் பற்றியும் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக் கூறுவோம். 

சுவாமி விபுலானந்தர் வாழ்க்கை வரலாறு (Swami Vipulananda History in Tamil) தொடர்பான இந்தக் கட்டுரை உங்களிடம் பல தகவல்களை கொண்டு வந்து சேர்த்திருக்கும் என நம்புகிறேன்.

இக்கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் அது பற்றிய கருத்துக்களை கீழே பதிவிடுங்கள். அத்துடன் Facebook, X, Instagram போன்ற எமது சமூக தளப் பக்கங்களையும் மறக்காமல் Follow செய்யுங்கள்.

பாரதியார் வரலாறு
பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top