Samsung Galaxy S22 Ultra 5G – Full Smartphone Features

Samsung Galaxy S22 Ultra 5G

சாம்சங் கேலக்ஸி குடும்பத்தில் (Samsung Galaxy) அடுத்து வெளியாக உள்ள ஒரு ஸ்மார்ட்போன் தான் Samsung Galaxy S22 Ultra 5G. விசேட சிறப்பம்சங்களை கொண்ட இந்த போன் பாவணையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது புதிய அழகான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு எஸ் பேனாவுடன் (S Pen) வெளிவருகிறது.

எஸ் பேனா உள்ளே பொருத்தப்பட்ட முதல் கேலக்ஸி S போனும் இதுவாகும்.

2 மடங்கு ஆற்றல் வாய்ந்த AMOLED முழு முடிவிலி திரை இந்த போனில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் 120Hz புதுப்பிப்பு விகிதத்தை உடைய மிகவும் சிறந்த செயல்திறனை கொண்ட திரை பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், நீங்கள் சமூக வலைதள ஆப்கள் (Apps) அல்லது இணைய உலாவியை (Internet Browser) பயன்படுத்தும் பொழுது மிக இலகுவாக ஸ்க்ரோல் (Scroll) செய்யமுடியும்.

இந்த போனை எவ்வளவு அதிகமான வெளிச்சத்திலும் நன்றாக பயன்படுத்தமுடியும். அதற்கு காரணம் இந்த ஸ்மார்ட்போன் அதிகபடியாக 1750 நிட்ஸ்களை கொண்டிருக்கிறது.

அதாவது, கண் கூசும் அளவுக்கு வெளிச்சமான இடமாக இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தமுடியும்.

நாம் ஒரு விலையுயர்ந்த ஸ்மார்போனை வாங்கும் போது கவனிக்கின்ற முக்கியமான விடயம் என்னவென்றால் அதன் பாதுகாப்பு தான். ஆம்! அந்தவகையில் இந்த Samsung Galaxy S22 Ultra 5G ஆனது மிக பாதுகாப்பானதென்றே கூறலாம்.

ஏனென்றால், இதன் முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் கோர்னிங் கொரில்லா கண்ணாடி வகையின் விக்ட்ஸ் ப்ளஸ் எனும் கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விக்டஸ் கண்ணாடி பொருத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போனும் இது என்பது குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய விடயமாகும்.

அதேபோல, அலுமினியத்திலான சட்டத்தில் (Frame) இந்த போன் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீர் மற்றும் தூசி உட்புகாதவாறு இந்த ஸ்மார்ட்போனும் அதன் எஸ் பேனாவும் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக 1.5 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை தூய நீரில் வைக்கமுடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் மிக சக்தி வாய்ந்த ஸ்னாப்ட்ராகன் 8 ஜெனரேஷன் 1 எனும் வேகமான சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதுவரையில் கேலக்ஸி தொடரில் வரும் மிக வேகமான சிப் இதுவாகும்.

இதில் ஆண்ட்ரொய்ட் 12 இயக்க முறைமை நிறுவப்பட்டுள்ளது. தற்போது வருகின்ற முதன்மையான தளம் இதுவாகும்.

அத்தோடு 4.1 பயனர் இடைமுகத்துடன் (User Interface) வருகிறது. இது ஆண்ட்ரொய்ட் 12 இற்கான புதிய புதுப்பிப்பாகும்.

இதில் தனிப்பயனாக்கக்கூடிய (Customize) பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த Samsung Galaxy S22 Ultra 5G இன் இன்னுமொரு விசேட அம்சம் அதன் கெமரா தான். பின் பக்கத்தின் பிரதான கெமராவாக 108MP கொண்ட கெமரா வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 12MP உடைய அல்ட்ராவைட் கெமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10MP இனை கொண்ட 10 மடங்கு உரு பெருக்கக்கூடிய தொலைதூர ஒளிப்பட கெமராவும் 10MP இனை கொண்ட 3 மடங்கு உரு பெருக்கும் இன்னொரு தொலைதூர ஒளிப்பட கெமராவும் பொருத்தப்பட்டுள்ளன.

இதுவரை சாம்சங்கில் வந்த மிகப்பெரிய பிக்சல் உணரி இந்த 108MP கெமடாவில் உள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) கொண்ட கெமராக்கள் என்பதால் மிக மிக துல்லியமான சிறந்த வர்ணக்கலவையுடன் கூடிய புகைப்படங்களை பெறமுடியும்.

இரவு வேளைகளிலும் கூட தெளிவான பிரகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

3 மடங்கு, 10 மடங்கு கெமராக்கள் இருப்பதால் தொலைவில் உள்ள காட்சிகளையும் சிறப்பாக புகைப்படமெடுக்க முடியும்.

வீடியோவை பொருத்தவரையில் பின் பக்க கெமராவின் மூலம் 8K தரம் வரை நீங்கள் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

தற்போது ரேம் மற்றும் சேமிப்பகம் பற்றி கவனிப்போம். இந்த ஸ்மாட்ர்போனானது 8GB, 12GB ரேம்களில் அமைக்கப்பட்டுள்ளதோடு 128GB, 256GB, 512GB, 1TB ஆகிய சேமிப்பகங்களில் வெளியாகின்றது.

5000mAh இனை கொண்ட மின்கலம் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் விரைவான மின்னூட்டல் வசதியும் உண்டு.

Samsung Galaxy S22 Ultra 5G இன் விலையை பொருத்தவரையில் $1,199.99 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy S22 Ultra
Samsung Galaxy S22 Ultra 5G

Samsung Galaxy S22 Ultra 5G இன் முழு விபரங்கள்

திரை (Display)

வகை Dynamic AMOLED 2x, 120Hz, HDR10+
Always-on Display
நிட்ஸ் (Nits) 1750 nits (Maximum)
அளவு 6.8 inches
பிரிதிறன் (Resolution) 1440×3088 Pixels
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) 500 PPI
பாதுகாப்பு Corning Gorilla Glass Victus+

 

Samsung Galaxy S22 Ultra 5G இன் அமைப்பு விபரங்கள்

நீளம் 163.3mm (6.43 inches)
அகலம் 77.9mm (3.07 inches)
தடிப்பம் 8.9mm (0.35 inches)
நிறை 228g
கட்டுமானப் பொருள் Front – Corning Gorilla Glass Victus+, Frame – Aluminum,

Back – Corning Gorilla Glass Victus+

பாதுகாப்பு IP68 Dust and Water Resistant (Up to 1.5m for 30 minutes)
Tough armor aluminum frame
Drop and scratch resistance (Advertised)

 

தளம்

இயக்க முறைமை (Operating System) Android 12, One UI 4.1
சிப்செட் (Chipset) Qualcomm SM8450 Snapdragom 8 Gen 1 (4nm)
Exynos 2200 (4nm) – Europe
செயலி (Processor) Octa-core (1×3.00GHz Cortex-X2 & 3×2.40GHz Cortex-A710 &
4×1.70GHz Cortex-A510)
Octa-core (1×2.8GHz Cortex-X2 & 3×2.50GHZ Cortex-A710 &
4×1.8GHz Cortex-A510) – Europe
வரைகலை செயலாக்க அலகு (GPU) Adreno 730
Xclipse 920 – Europe

 

பின் பக்க கெமரா

கெமரா 108MP, f/1.8, 24mm (Wide), 1/1.33”, 0.8µm, Phase Detection

Autofocus, Laser Autofocus, Optical Image Stabilization

10MP, f/4.9, 230mm (Periscope Telephoto), 1/3.52”, 1.12µm,

Dual Pixel Autofocus, Optical Image Stabilization, 10x Optical

Zoom

10MP, f/2.4, 70mm (Telephoto), 1/3.52”, 1.12µm, Dual Pixel

Autofocus, Optical Image Stabilization, 3x Optical Zoom

12MP, f/2.2, 13mm, 1200 (Ultrawide), 1/2.55”, 1.4µm, Dual

Pixel, Super Steady Video

சிறப்பம்சங்கள் LED Flash, Auto HDR, Panorama
வீடியோ 8K@24fps, 4K@30/60fps, 1080@30/30/240fps, 720p@960fps,

HDR10+, Stereo Sound Recording, Gyro Electronic Image

Stabilization, Digital Zoom up to 20x

 

முன் பக்க கெமரா

கெமரா 40MP, f/2.2, 26mm (Wide), 1/2.82”, 0.7µm, Phase Detection

Autofocus

சிறப்பம்சங்கள் Dual Video Call, Auto-HDR
வீடியோ 4K@30/60fps, 1080p@30fps

 

ஒலி (Sound)

ஒலிபரப்பி (Loudspeaker) Yes, with Stereo Speakers, Dolby Digital, Dolby Digital Plus
3.5mm ஜெக் (Jack) No
விபரம் 32-bit/384kHz Audio
Turned by AKG

 

Samsung Galaxy S22 Ultra 5G இன் சிறப்பம்சங்கள்

உணரிகள் (Sensors) Fingerprint (Under Display, Ultrasonic), Accelerometer, Gyro,

Proximity, Compass, Barometer, Ambient Light, Hall,

Geomagnetic

எஸ் பேனா (S Pen) Stylus, 2.8ms latency
ஏனையவை Samsung DeX, Samsung Wireless DeX (Desktop Experience
Support)
Bixby natural language commands and dictation
Samsung Pay (Visa, MasterCard certified)
Ultra-Wideband (UWB) Support

 

நினைவகம் (Memory)

ரேம் 8GB, 12GB
சேமிப்பகம் 128GB, 256GB, 512GB, 1TB
UFS 3.1
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) No

 

மின்கலம் (Battery)

வகை Li-lon 5000mAh, Non-removable
மின்னூட்டம் (Charge) Fast charging 45W
Fast Qi/PMA wireless charging 15W
USB Power Delivery 3.0
Reverse wireless charging 4.5W

 

வலையமைப்பு

தொழிநுட்பம் GSM/CDMA/HSPA/EVDO/LTE/5G
2ஜி பேண்ட்கள் (2G Bands) GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2 (Dual Sim model only)
3ஜி பேண்ட்கள் (3G Bands) HSDPA 850/900/1700(AWS) 1900/2100 CDMA2000 1xEV-DO
4ஜி பேண்ட்கள் (4G Bands) 1, 2, 3, 4, 5, 7, 8, 12, 13, 17, 18, 19, 20, 25, 26, 28, 32, 38, 39, 40,

41, 66

5ஜி பேண்ட்கள் (5G Bands) 1, 2, 3, 5, 7, 8, 12, 20, 25, 28, 38, 40, 41, 66, 75, 77, 78,

SA/NSA/Sub6

வேகம் HSPA 42.2/5.76Mbps, LTE-A (7CA) Cat20 2000/200Mbps,

5G (5+Gbps DL)

 

இணைப்புகள்

வைஃபை (Wi-Fi) Wi-Fi 802.11 a/b/g/n/ac/6e, Dual Band, Wi-Fi Direct, Hotspot
புளூடூத் (Bluetooth) 5.2, A2DP, LE
ஜிபிஎஸ் (GPS) Yes, with A-GPS, BDS, GLONASS, GALILEO
என்எஃப்சி (NFC) Yes
யூஎஸ்பி (USB) USB Type-C 3.2, USB On-The-Go

 

Samsung Galaxy S22 Ultra 5G இன் பொதுவான அம்சங்கள் 

Sim Single Sim (Nano Sim) or Dual Sim (2 Nano Sim),

Single Sim (Nano Sim) or Dual Sim (2 Nano Sim) + eSim

Colors Phantom Black, White, Burgundy, Green, Graphite, Red, Sky Blue
வானொலி (Radio) Not mentioned

 

Samsung Galaxy S22 Ultra 5G இன் வெளியீடு

அறிவித்த திகதி 09 February 2022
வெளியாகின்ற திகதி 25 February 2022

 

இதையும் வாசிக்க: 

இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top