Realme 9 Pro – Full Smartphone Features

Realme 9 Pro

ரியல்மீயின் (Realme) மற்றுமொரு ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. Realme 9 Pro என அழைக்கப்படுகின்ற இந்த போன் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக இது 5G தொழினுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு ஸ்மார்ட்போன் ஆகும்.

IPS LCD திரையை கொண்டுள்ள இந்த போனானது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டுள்ளது. எனினும் அதன் நிட்ஸ் அளவு பற்றி உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

Realme 9 Pro ஆனது ஆண்ட்ரொய்ட் 12 இல் இயங்குகிறது. தற்போதுள்ள முதன்மையான இயங்கு தளத்தை இந்த போனிற்கு வழங்கியது ஒரு சிறந்த அம்சமாகும். மேலும், இதற்கு ஸ்னாப்ட்ராகன் 695 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனின் கெமராக்களை பற்றி கவனித்தால், இதன் பின் பக்க கெமராவாக 64MP கெமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 8MP கொண்ட சூப்பர் வைட் (Super Wide) கெமராவும் 2MP உடைய மெக்ரோ கெமராவும் பொருத்தப்பட்டுள்ளன.

64MP கெமரா மூலம் மிக நேர்த்தியான, அழகான புகைப்படங்களை எவ்வகையான வெளிச்சத்திலும் எடுக்க முடியும். அத்துடன், மெக்ரோ கெமரா மூலம் 4cm அளவு பக்கத்திலும் புகைப்படங்களை பெற முடியும்.

குறிப்பாக இந்த 64MP நைட்ஸ்கேப் (Nightscape) கெமரா மூலம் இரவிலும் வெளிச்சம் மிக குறைவான இடங்களிலும் மிகத் தெளிவான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெற முடியும்.

மேலும், விசேடமாக அமைக்கப்பட்ட ஸ்வீப் அண்ட் டெப் (Swipe and tap) முறை மூலம் குறிப்பிட்ட இடத்தை சூம் (Zoom) செய்து ஃபோகஸ் (Focus) செய்யக்கூடியதாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனிற்கு முன் பக்க கெமராவாக 16MP கெமரா வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து, ரேம் பற்றி பார்க்கலாம். 6GB மற்றும் 8GB ரேம்களில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் உங்களுக்கு ரேம்மை அதிகரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டால் 13GB வரை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த போன் 128GB சேமிப்பகத்தில் மாத்திரமே கிடைக்கின்றது. இது 5000mAh அளவுள்ள மின்கலம் பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் உங்களது அன்றாட காரியாலய பணிகளுக்கு சிறப்பாக இருக்கும்.

Realme 9 Pro
Realme 9 Pro

 

Realme 9 Pro இன் முழு விபரங்கள்

திரை (Display)

வகை IPS LCD
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 120Hz
நிட்ஸ் (Nits) Not mentioned
அளவு 6.6 inches
பிரிதிறன் (Resolution) 1080×2412 Pixels
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) 400
பாதுகாப்பு Not mentioned

 

Realme 9 Pro இன் அமைப்பு விபரங்கள்

நீளம் 164.3mm (6.47 inches)
அகலம் 75.6mm (2.98 inches)
உயரம் 8.5mm (0.33 inches)
நிறை 195g
கட்டுமானப் பொருள் Not mentioned
பாதுகாப்பு Not mentioned

 

தளம்

இயக்க முறைமை (Operating System) Android 12
பயனர் இடைமுகம் (User Interface) Realme UI 3.0
சிப்செட் (Chipset) Qualcomm SM6375 Snapdragon 695 5G (6nm)
செயலி (Processor) Octa-core (2×2.2GHz Kyro 660 Gold & 6×1.7GHz Kyro 660 Silver)
வரைகலை செயலாக்க அலகு (GPU) Adreno 619

 

பின் பக்க கெமரா

கெமரா 64MP, f/1.8, 26mm (Wide), Phase Detection Autofocus
8MP, f/2.2, 1190 , 16mm (Ultrawide), 1/4.0”, 1.12µm
2MP, f/2.4, (Macro)
சிறப்பம்சங்கள் LED Flash, HDR, Panorama
வீடியோ 1080p – 30fps

 

முன் பக்க கெமரா

கெமரா 16MP, f/2.1, 26mm (Wide), 1/3.09”, 1.0µm
சிறப்பம்சங்கள் HDR, Panorama
வீடியோ 1080p – 30fps

 

ஒலி (Sound)

ஒலிபரப்பி (Loudspeaker) Yes
3.5mm ஜெக் (Jack) Yes
விபரம் 24-bit/192kHz Audio

 

Realme 9 Pro இன் சிறப்பம்சங்கள்

உணரிகள் (Sensors) Fingerprint (Side-mounted), Gyroscope, Accelerometer,

Proximity, Light, Magnetic induction

 

நினைவகம் (Memory)

ரேம் 6GB, 8GB (Expandable up to 13GB)
சேமிப்பகம் 128GB
Universal Flash Storage 2.2
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) MicroSDXC

 

மின்கலம் (Battery)

வகை Li-Po 5000mAh, non-removable
மின்னூட்டம் (Charge) Fast charging 33W

 

வலையமைப்பு

தொழிநுட்பம் GSM/HSPA/LTE/5G
2ஜி பேண்ட்கள் (2G Bands) GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2
3ஜி பேண்ட்கள் (3G Bands) HSDPA 850/1900/1700 (AWS) 1900/2100
4ஜி பேண்ட்கள் (4G Bands) 1, 2, 3, 4, 5, 7, 8, 12, 13, 17, 18, 19, 20, 26, 28, 38, 39, 40, 41, 66
5ஜி பேண்ட்கள் (5G Bands) 1, 3, 5, 7, 8, 20, 28, 38, 40, 41, 66, 77, 78 SA/NSA
வேகம் HSPA 42.2/5.76Mbps, LTE-A, 5G

 

இணைப்புகள்

வைஃபை (Wi-Fi) Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dual-band, Hotspot
புளூடூத் (Bluetooth) 5.1, A2DP, LE, aptX HD
ஜிபிஎஸ் (GPS) GPS, A-GPS, GLONASS, BDS
என்எஃப்சி (NFC) Yes (Depend on market/region)
யூஎஸ்பி (USB) USB Type-C, USB On-The-Go

 

Realme 9 Pro இன் பொதுவான அம்சங்கள்

Sim Hybrid Dual Sim (Nano Sim, Dual stand-by)
Colors Sunrise Blue, Midnight Black, Aurora Green
வானொலி (Radio) No

 

Realme 9 Pro இன் வெளியீடு

அறிவித்த திகதி 16 February 2022
வெளியான திகதி 23 February 2022

 

இதையும் வாசிக்க: 

 

 

 

இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top