ஒப்போ (Oppo) நிறுவனம் தனது புதிய Oppo F21 Pro இனைப் பற்றி அறிவித்துள்ளது. பல சிறப்பான முதன்மையான அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. குறிப்பாக நல்ல செயல்திறன் மிக்க சிப்செட்டுடன் பல பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்க இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் திரையானது AMOLED திரையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 90Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட இந்த திரையின் உயர்ந்தபட்ச தொடு மாதிரி விகிதம் 180Hz ஆக காணப்படுகிறது.
16.7 மில்லியன் வர்ணங்களை கொண்ட இந்த திரையானது கோர்னிங் கொரில்லா கண்ணாடியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரையானது நீல ஒளியிலிருந்து பாதுகாக்கக்கூடிய திரை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ரொய்ட் 12 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 12.1 இல் இயங்குகிறது. முக்கியமாக ஸ்னாப்ட்ராகன் 680 4ஜீ சிப்செட் இந்த ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்த ஸ்மார்ட்போனின் ஒரு சிறப்பம்சமாகும்.
மேலும், அட்ரெனா 610 எனும் வரைகலை செயலாக்க அலகு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த Oppo F21 Pro இல் பின் பக்கத்தில் பிரதான கெமராவாக 64MP கொண்ட கெமராவுடன் மேலும், 2 கெமராக்களும் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, பிரதான கெமரா தவிர்ந்த 2MP உடைய மைக்ரோஸ்கோப் கெமராவும் 2MP கொண்ட டெப்த் கெமராவும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த கெமராக்களின் மூலம் உண்மையாகவே மிக நல்ல புகைப்படங்களை பெற முடியும். குறிப்பாக, மைக்ரோலென்ஸ் கெமரா மூலம் 30 மடங்கு வரை உருப்பெருக்கம் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் முன் பக்கத்தில் 32MP கொண்ட கெமராவுடன் இந்த போன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது சோனி வன்பொருளுடன் (Sony Hardware) தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கெமராவினால் எந்த வெளிச்ச நிலைமையிலும் தெளிவான அழகான புகைப்படங்களை பெற முடியும்.
இது ஒரு AI (Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு)) கெமரா என்பதால் எந்த வேளையிலும் தானாகவே வெளிச்சத்தை சரிசெய்து சிறந்த புகைப்படங்களை பெற உதவும்.
இந்த Oppo F21 Pro ஸ்மார்ட்போனானது 8GB ரேம்மில் மாத்தரமே வெளியாகின்றது. இருந்தபொழுதிலும் கூட, சேமிப்பத்தினைக் கொண்டு மேலும் 5GB வரை ரேம்மை அதிகரித்துக்கொள்ள முடியும். பல கனமான வேலைகளுக்கு இது சிறந்த தீர்வாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தை பற்றி பார்த்தால், இதில் 128GB அளவுகொண்ட சேமிப்பகம் உள்ளது.
4500mAh அளவுடைய மின்கலம் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அளவை சற்று அதிகரித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எனினும், விரைவான மின்னூட்டல் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
5 நிமிடத்தில் 2.68 மணித்தியாலங்கள் பேசக்கூடிய அளவு மின்னூட்டல் செய்யக்கூடியதாக இருக்கும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
Oppo F21 Pro ஒரு 5G ஸ்மார்ட்போன் இல்லை என்பது கவலைக்குறிய விடயமாகும். ஆம்! இதற்கு 5G தொழினுட்பம் வழங்கப்படவில்லை.
இந்த ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி கூறியே ஆக வேண்டும். அதாவது, இந்த ஸ்மார்ட்போனானது கீழே விழுதல், நீர் உட்புகாமலிருத்தல், கதிர்வீச்சு, காலநிலை, சிறு வீழ்ச்சி, மேற்பரப்பு முனையின் உறுதி, பாதுகாப்பு போன்ற 6 பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
ஆகவே, இந்த ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு பற்றிய எந்த பயமும் இன்றி இதை கொள்வனவு செய்து பயன்படுத்தலாம்.
Oppo F21 Pro இன் முழு விபரங்கள்
திரை (Display)
வகை | AMOLED |
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) | 120Hz |
நிட்ஸ் (Nits) | 800 Maximum |
அளவு | 6.43 inches |
பிரிதிறன் (Resolution) | 1080×2400 Pixels, 20:9 Ratio |
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) | 409ppi |
பாதுகாப்பு | Corning Gorilla Glass 5 |
Oppo F21 Pro இன் அமைப்பு விபரங்கள்
நீளம் | 159.9mm (6.30 inches) |
அகலம் | 73.2mm (2.88 inches) |
உயரம் | 7.5mm (0.30 inch) |
நிறை | 175g |
கட்டுமானப் பொருள் | Not mentioned |
பாதுகாப்பு | IPX4 Water-Resistant |
தளம்
இயக்க முறைமை (Operating System) | ColorOS 12.1 based on Android 12 |
சிப்செட் (Chipset) | Qualcomm SM6225 Snapdragon 680 4G (6nm) |
செயலி (Processor) | Octa-core (4×2.4GHz Kyro 265 Gold & 4×1.9GHz Kyro 265
Silver) |
வரைகலை செயலாக்க அலகு (GPU) | Adreno 610 |
பின் பக்க கெமரா
கெமரா | 64MP, f/1.7, 26mm (Wide), 1/2.0”, 0.7µm |
2MP, f/3.3 (Microscope) | |
2MP, f/2.4 (Depth) | |
சிறப்பம்சங்கள் | LED Flash, HDR, Panorama, Phase Detection Autofocus, Gyro
Electronic Image Stabilization |
வீடியோ | 1080p – 30fps |
முன் பக்க கெமரா
கெமரா | 32MP, f/2.4, 24mm (Wide), 1/2.74”, 0.8µm |
சிறப்பம்சங்கள் | Panorama, HDR, Gyro Electronic Image Stabilization |
வீடியோ | 1080p – 30fps |
ஒலி (Sound)
ஒலிபரப்பி (Loudspeaker) | Yes |
3.5mm ஜெக் (Jack) | Yes |
Oppo F21 Pro இன் சிறப்பம்சங்கள்
உணரிகள் (Sensors) | Fingerprint (Under Display, Optical), Gyroscope, Compass,
Accelerometer, Proximity, Gravity, Pedometer |
நினைவகம் (Memory)
ரேம் | 8GB |
சேமிப்பகம் | 128GB |
Universal Flash Storage 2.2 | |
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) | MicroSDXC |
மின்கலம் (Battery)
வகை | Li-Po 4500mAh, non-removable |
மின்னூட்டம் (Charge) | Fast charging 33W |
Reverse charging |
வலையமைப்பு
தொழினுட்பம் | GSM/HSPA/LTE |
2ஜி பேண்ட்கள் (2G Bands) | GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2 |
3ஜி பேண்ட்கள் (3G Bands) | HSDPA 850/900/2100 |
4ஜி பேண்ட்கள் (4G Bands) | 1, 3, 5, 8, 38, 40, 41 |
வேகம் | HSPA 42.2/5.76Mbps, LTE-A |
இணைப்புகள்
வைஃபை (Wi-Fi) | Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dual-band, Wi-Fi Direct, Hotspot |
புளூடூத் (Bluetooth) | 5.1, A2DP, BLE, aptX HD |
ஜிபிஎஸ் (GPS) | GPS, A-GPS, GLONASS, Galileo, BeiDou, QZSS |
என்எஃப்சி (NFC) | No |
யூஎஸ்பி (USB) | USB Type-C, USB On-The-Go |
Oppo F21 Pro இன் பொதுவான அம்சங்கள்
Sim | Dual Sim (Nano-Sim, Dual Stand-by) |
Colors | Cosmic Black, Sunset Orange |
வானொலி (Radio) | No |
Oppo F21 Pro இன் வெளியீடு
அறிவித்த திகதி | 12 April 2022 |
வெளியான திகதி | 15 April 2022 |
இதையும் வாசிக்க:
- Xiaomi Poco M4 Pro இன் முழு விபரங்கள்
- Apple iPhone SE 2022 இன் முழு விபரங்கள்
- OnePlus Nord CE 2 5G இன் முழு விபரங்கள்
- Samsung Galaxy A73 5G இன் முழு விபரங்கள்
- Samsung Galaxy A53 5G இன் முழு விபரங்கள்
இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com