நோகியா (Nokia) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Nokia G21 என பெயரிடப்பட்டுள்ள அந்த கையடக்கத்தொலைபேசியில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனானது கடந்த வருடம் வெளியான Nokia G20 இன் அடுத்த தயாரிப்பு என்று கூறலாம்.
முதலில் இதன் திரையை பற்றி பார்த்தோமானால் இந்த ஸ்மார்ட்போன் 90Hz புதுப்பிப்பு விகிதத்தினை உடைய IPS LCD திரையினை கொண்டுள்ளது. இது 400 நிட்ஸ் இனை கொண்டுள்ளதால் வெளிச்சம் நிறைந்த இடத்திலும் இந்த போனை இலகுவாக பயன்படுத்த முடியும்.
மேலும், இது 270 பிக்செல் அடர்த்தியை கொண்டுள்ளதோடு 720×1600 பிரிதிறனையும் கொண்டிருக்கிறது.
190g நிறையுடைய இந்த ஸ்மார்ட்போனானது பிளாஸ்டிக்கினால் மேற்பரப்பு செய்யப்பட்டுள்ளதால் பயன்படுத்தும் போது கொஞ்சம் கவனமாக பயன்படுத்துவது நல்லது. இதில் 2 நனோ சிம்களை பயன்படுத்த முடியும்.
இது ஆண்ட்ரொய்ட் 11 இயக்க முறைமையில் இயங்குகிறது. எனினும் மேம்படுத்தல் (Upgradable) பற்றி உறுதியாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதில் யுனிசொக் T606 என்கிற சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மெலி-G57MP1 என்ற வரைகலை செயலாக்க அலகை பயன்படுத்தியுள்ளார்கள்.
தற்போது இந்த ஸ்மார்ட்போனின் கெமரா பற்றி பார்க்கலாம். இந்த போனின் முக்கியமான சிறப்பியல்பு அதன் பிரதான கெமரா தான். ஆம்! 50MP உடைய பிரதான கெமரா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2MP மெக்ரோ மற்றும் 2MP டெப்த் கெமராவும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே புகைப்படங்களை அதிகமாக பிடிக்க நினைப்பவர்களுக்கு இந்த போன் சிறந்த கருவியாக இருக்கும். அத்துடன் அழகான நேர்த்தியான புகைப்படங்களையும் பெற முடியும்.
எனினும், முன் பக்க கெமராவாக 8MP கெமரா ஒன்று தான் கொடுக்கப்பட்டுள்ளது. அது சற்று குறைவென்றே கூற முடியும்.
இந்த போனானது 3GB, 4GB ரேம்களில் கிடைப்பதோடு 64GB மற்றும் 128GB சேமிப்பங்களையும் கொண்டிருக்கின்றது.
அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர்க்கு இது நல்ல தெரிவாக இருக்கும். ஏனென்றால், 5050mAh மின்கலத்தினை கொண்டிருக்கிறது. ஆகவே நீண்ட நேர பாவணைக்கு இந்த போன் சிறந்ததாக அமையும்.
Nokia G21 இனை 4G வரையிலான வலையமைப்பில் பயன்படுத்த முடியும். அதிகபட்சமாக 150/50 Mbps வேகத்தில் பயன்படுத்தலாம்.
இதன் விலை 200$ இற்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nokia G21 இன் முழு விபரங்கள்
திரை (Display)
வகை | IPS LCD, 90Hz |
நிட்ஸ் (Nits) | 400 nits |
அளவு | 6.5 inches, 102cm2 |
பிரிதிறன் (Resolution) | 720×1600 Pixel, 20:9 ratio |
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) | 270 ppi |
Nokia G21 இன் அமைப்பு விபரங்கள்
நீளம் | 164.6mm (6.48 in) |
அகலம் | 75.9mm (2.99 in) |
உயரம் | 8.5mm (0.33 in) |
நிறை | 190g |
கட்டுமானப் பொருள் | Front – Glass, Frame – Plastic, Back – Plastic |
தளம்
இயக்க முறைமை (Operating System) | Android 11 |
சிப்செட் (Chipset) | Unisoc T606 (12nm) |
செயலி (Processor) | Octa-core (2×1.6GHz Cortex-A75 & 6×1.6GHz Cortex-A55) |
வரைகலை செயலாக்க அலகு (GPU) | Mali-G54 MP1 |
கெமரா (Camera)
பின் பக்கம் | 50MP, f/1.8, 28mm (Wide), 1/2.76”, 0.64µm, PDAF |
2MP (Macro) | |
2MP (Depth) | |
சிறப்பம்சங்கள் | LED Flash, HDR, Panorama |
வீடியோ | 1080p@30fps |
முன் பக்கம் | 8MP, f/2.0 (Wide) |
வீடியோ | 1080p@30fps |
ஒலி (Sound)
ஒலிபரப்பி (Loudspeaker) | Yes |
3.5mm ஜெக் (Jack) | Yes |
Nokia G21 இன் சிறப்பம்சங்கள்
உணரிகள் (Sensors) | Fingerprint (Side-mounted), Accelerometer, Proximity |
நினைவகம் (Memory)
ரேம் | 3GB, 4GB |
சேமிப்பகம் | 64GB, 128GB |
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) | MicroSDXC |
மின்கலம் (Battery)
வகை | Li-Po 5050mAh, Non-removable |
மின்னூட்டம் (Charge) | Fast battery charging 18W |
USB Power delivery 3.0 |
வலையமைப்பு
தொழிநுட்பம் | GSM/HSPA/LTE |
2ஜி பேண்ட்கள் (2G Bands) | GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2 (Dual Sim model only) |
3ஜி பேண்ட்கள் (3G Bands) | HSDPA 850/900/1200 – International |
HSPDA 850/900/1700(AWS) 1900/2100 – Latam | |
4ஜி பேண்ட்கள் (4G Bands) | 1, 3, 5, 7, 8, 20, 28, 38, 40, 41 – International |
1, 2, 3, 4, 5, 7, 8, 12, 17, 28, 40, 66 – Latam | |
வேகம் | HSPA 42.2/5.76 Mbps, LTE Cat4 150/50 Mbps |
இணைப்புகள்
வைஃபை (Wi-Fi) | Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dual-band, Wi-Fi Direct, Hotspot |
புளூடூத் (Bluetooth) | 5.0 A2DP, LE |
ஜிபிஎஸ் (GPS) | Yes, A-GPS, GLONASS, GALILEO |
என்எஃப்சி (NFC) | Yes (Market/Region Depends on) |
யூஎஸ்பி (USB) | Type-C 2.0, USB On-The-Go |
Nokia G21 இன் பொதுவானவான அம்சங்கள்
சிம் (Sim) | Single Sim (Nano Sim) or Dual Sim (Nano Sim) – Dual stand by |
நிறம் (Colors) | Nordic Blue, Dusk |
வானொலி (Radio) | FM Radio, RDS, Recording |
இதையும் வாசிக்க:
- Xiaomi Redmi Note 11 இன் முழு விபரங்கள்
- Xiaomi Redmi Note 11 Pro இன் முழு விபரங்கள்
- Samsung Galaxy S22 Ultra 5G இன் முழு விபரங்கள்
இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com