Oppo F21 Pro 5G – Full Smartphone Features

Oppo F21 Pro 5G

ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் Oppo F21 Pro இனை வெளியிட்டிருந்தது. இது 4G ஸ்மார்ட்போனாகும். அந்தவகையில், தற்போது அதன் 5G தொழினுட்பத்திலான புதிய Oppo F21 Pro 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரு சில சிறப்பம்சங்களே மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பெரும்பாலானவை ஒரே அம்சங்களாகத்தான் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் திரையை பற்றி முதலில் பார்க்கலாம். இது ஒரு AMOLED திரையாகும். மேலும், இது 6.43 அங்குலங்களை கொண்டுள்ளதோடு, உயர்ந்தபட்சமாக 180Hz தொடு மாதிரி விகிதத்தை கொண்டிருக்கிறது.

இத்திரையானது ஸ்கொட் சென்சேஷன் கண்ணாடி மூலம் பாதுக்காக்கப்படுகிறது.

இயங்கு தளத்தை பொருத்தவரையில், இந்த போன் ஆண்ட்ரொய்ட் 12 இன் அடிப்படையில் அமைந்த கலர்ஓஎஸ் 12 தளத்தில் இயங்குகிறது. அத்துடன்,  இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ராகன் 695 5ஜீ சிப்செட்டுடன் அமைக்கப்பட்டுள்ளதோடு அட்ரெனா 619 எனும் வரைகலை செயலாக்க அலகும் பொருத்தப்பட்டுள்ளது.

இனி, இந்த போனினுடைய கெமராக்களின் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம். இதன் பின் பக்கத்தில் மூன்று கெமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரதான கெமரா 64MP இனை கொண்ட வைட் (Wide) கெமராவாகும்.

இதன் மற்ற இரண்டு கெமராக்களும் தலா 2MP அளவுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின் பக்கத்தில் டுவல் ஓர்பிட் லைட்ஸ் (Dual Orbit Lights) பொருத்தப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளதோடு, போனின் வடிவத்தை மேலும் மெருகேற்றுகிறது.

இதன் முன் பக்கத்தில் 16MP கொண்ட கெமராவை பொருத்தியுள்ளார்கள். இந்த போனின் கெமராக்களில் உள்ள ஒரு மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால், முன், பின் பக்க கெமராக்களில் வீடியோக்களை ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியும்.

இந்த ஸ்மார்ட்போனானது 8GB ரேம் உடன் வெளியாகும் அதேவேளை, 128GB சேமிப்பகத்தை கொண்டிருக்கிறது. இந்த சேமிப்பகத்தின் மூலம் மேலும் 5GB அளவு வரை ரேம்மை அதிகரித்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஸ்மார்ட்போனில் 4500mAh அளவுள்ள மின்கலம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 5 நிமிடங்கள் மின்னூட்டல் செய்வதன் மூலம் 3 மணித்தியாலங்கள் அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என தனது உத்தியோகபூர்வ இணைய தளத்தில் அறிவித்துள்ளார்கள்.

அத்துடன், 63 நிமிடங்களில் 100% மின்னூட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oppo F21 Pro 5G
Oppo F21 Pro 5G

 

Oppo F21 Pro 5G இன் முழு விபரங்கள்

திரை (Display)

வகை AMOLED
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 60Hz
நிட்ஸ் (Nits) 600 Maximum
அளவு 6.43 inches
பிரிதிறன் (Resolution) 1080×2400 Pixels, 20:9 Ratio
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) 409ppi
பாதுகாப்பு Schott Xensation Glass

 

Oppo F21 Pro 5G இன் அமைப்பு விபரங்கள்

நீளம் 159.9mm (6.30 inches)
அகலம் 73.2mm (2.88 inches)
உயரம் 7.5mm (0.30 inch)
நிறை 173g
கட்டுமானப் பொருள் Not mentioned
பாதுகாப்பு IPX4, Dust and Water Resistant

 

தளம்

இயக்க முறைமை (Operating System) ColorOS 12 Based on Android 12
பயனர் இடைமுகம் (User Interface) ColorOS
சிப்செட் (Chipset) Qualcomm SM6375 Snapdragon 695 5G (6nm)
செயலி (Processor) Octa-core (2×2.2GHz Kyro 660 Gold & 6×1.7GHz

Kyro 660 Silver)

வரைகலை செயலாக்க அலகு (GPU) Adreno 619

 

பின் பக்க கெமரா

கெமரா 64MP, f/1.7, 26mm (Wide), Phase Detection Autofocus
2MP, f/2.4 (Macro)
2MP, f/2.4 (Depth)
சிறப்பம்சங்கள் LED Flash, HDR, Panorama
வீடியோ 1080p – 30fps

 

முன் பக்க கெமரா

கெமரா 16MP, f/2.4, 27mm (Wide), 1.0µm
சிறப்பம்சங்கள் HDR, Panorama
வீடியோ 1080p – 30fps

 

ஒலி (Sound)

ஒலிபரப்பி (Loudspeaker) Yes
3.5mm ஜெக் (Jack) Yes

 

Oppo F21 Pro 5G இன் சிறப்பம்சங்கள்

உணரிகள் (Sensors) Fingerprint (Side-mounted) Gyroscope, Accelerometer,

Compass, Proximity, Gravity Sensor, Optical Sensor,

Pedometer

ஏனையவை Dual Orbit Light around the cameras

 

நினைவகம் (Memory)

ரேம் 8GB
சேமிப்பகம் 128GB
Universal Flash Storage 2.2
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) MicroSDXC Up to 1TB

 

மின்கலம் (Battery)

வகை Li-Po 4500mAh non-removable
மின்னூட்டம் (Charge) Fast charging 33W, 31% in 15 minutes, 100% in 63 minutes
Reverse charging
USB Power Delivery

 

வலையமைப்பு

தொழினுட்பம் GSM/HSPA/LTE/5G
2ஜி பேண்ட்கள் (2G Bands) GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2
3ஜி பேண்ட்கள் (3G Bands) HSDPA 800/850/900/1900/2100
4ஜி பேண்ட்கள் (4G Bands) 1, 3, 5, 7, 8, 28, 34, 38, 39, 40, 41
5ஜி பேண்ட்கள் (5G Bands) 1, 8, 28, 41, 77, 78 SA/NSA
வேகம் HSPA 42.2/5.76Mbps, LTE-A (CA), 5G

 

இணைப்புகள்

வைஃபை (Wi-Fi) Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dual-band, Wi-Fi Direct, Hotspot
புளூடூத் (Bluetooth) 5.1, A2DP, LE, aptX HD
ஜிபிஎஸ் (GPS) GPS, A-GPS, GLONASS, Galileo, BeiDou
என்எஃப்சி (NFC) Yes
யூஎஸ்பி (USB) USB Type-C 2.0, USB On-The-Go

 

Oppo F21 Pro 5G இன் பொதுவான அம்சங்கள்

Sim Dual Sim (Nano-Sim, Dual Stand-by)
Colors Rainbow Spectrum, Cosmic Black
வானொலி (Radio) No

 

Oppo F21 Pro 5G இன் வெளியீடு

அறிவித்த திகதி 12 April 2022
வெளியான திகதி 21 April 2022

 

இதையும் வாசிக்க: 

 

இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top