ரியல்மீ (Realme) நிறுவனம் GT தொடரின் மற்றுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Realme GT Neo 3 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனானது, பல சிறப்பான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் திரை விபரத்தை முதலில் பார்ப்போம். இது ஒரு AMOLED திரையாகும். குறிப்பாக இது 1.07 பில்லியன் வர்ணங்களை காட்சிப்படுத்தக்கூடியது.
அத்துடன், இந்த திரையானது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டிருக்கிறது. திரையின் பாதுகாப்பை பொருத்தவரையில், இதற்கு கோர்னிங் கொரில்லா கண்ணாடி 5 பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் திரையை பற்றி கவனித்து பார்த்தால் இது முற்றிலும் முதன்மையான சிறந்த திரை என்றே சொல்ல முடியும்.
இந்த போனானது மீடியாடெக் டைமென்சிடி 8100 சிப்செட்டினால் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன், மாலி ஜீ610 எனும் வரைகலை செயலாக்க அலகும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ரொய்ட் 12 இயங்கு தளத்தில் இயங்குகிறது.
தற்போது கெமரா பற்றிய விபரங்களை பார்க்கலாம். இந்த Realme GT Neo 3 ஆனது பின் பக்கத்தில் 3 கெமராக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதான கெமரா 50MP இனை கொண்டுள்ளது.
மற்ற 2 கெமராக்களும் முறையே 8MP, 2MP அளவுகளை கொண்டுள்ளன. குறிப்பாக இதன் பிரதான கெமரா சோனி IMX766 சென்சர் கெமராவாகும். இது ஒரு சிறப்பான கெமரா என்று கூற முடியும். இது மிக குறைவான வெளிச்சத்திலும் சிறப்பாக புகைப்படங்களை எடுக்கக்கூடியது.
16MP இனை கொண்ட கெமரா இப்போனின் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
6GB, 8GB, 12GB ஆகிய ரேம் அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அதற்கு பொருத்தமான முறையில் 128GB, 256GB அளவுடைய சேமிப்பகங்களில் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh அளவுடைய மின்கலம் பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளது. மேலும், இது 80W இல் மின்னூட்டக்கூடியது. இதன் மூலம் 12 நிமிடங்களில் 50% மின்னூட்ட முடியும். அதேபோல 32 நிமிடங்களில் 100% மின்னூட்ட முடியும்.
அத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 150W இலும் கிடக்கிறது. இதை 150W இல் மின்னூட்டும் போது 5 நிமிடங்களில் 50% மின்னூட்ட முடியும்.
Realme GT Neo 3 இன் முழு விபரங்கள்
திரை (Display)
வகை | AMOLED, HDR10+, 1 billion colors |
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) | 120Hz |
நிட்ஸ் (Nits) | Not mentioned |
அளவு | 6.7 inches |
பிரிதிறன் (Resolution) | 1080×2412 Pixels, 20:9 Ratio |
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) | 394ppi |
பாதுகாப்பு | Corning Gorilla Glass 5 |
Realme GT Neo 3 இன் அமைப்பு விபரங்கள்
நீளம் | 163.3mm (6.43 inches) |
அகலம் | 75.6mm (2.98 inches) |
உயரம் | 8.2mm (0.32 inch) |
நிறை | 188g |
கட்டுமானப் பொருள் | Not mentioned |
தளம்
இயக்க முறைமை (Operating System) | Android 12 |
பயனர் இடைமுகம் (User Interface) | Realme UI 3.0 |
சிப்செட் (Chipset) | MediaTek Dimensity 8100 (5nm) |
செயலி (Processor) | Octa-core (4×2.85GHz Cortex-A78 & 4×2.0GHz Cortex-A55) |
வரைகலை செயலாக்க அலகு (GPU) | Mali-G610 MC6 |
பின் பக்க கெமரா
கெமரா | 50MP, f/1.9, 24mm (Wide), 1/1.56”, 1.0µm, Phase Detection
Autofocus, Optical Image Stabilization |
8MP, f/2.3, 15mm, 1200 (Ultrawide), 1/4.0”, 1.12µm | |
2MP, f/2.4 (Macro) | |
சிறப்பம்சங்கள் | Dual-LED Dual-tone Flash, HDR, Panorama |
வீடியோ | 4K – 30/60fps, 1080p – 30/60fps, Gyro-Electronic Image
Stabilization |
முன் பக்க கெமரா
கெமரா | 16MP, f/2.5, 26mm (Wide), 1/3.09”, 1.0µm |
சிறப்பம்சங்கள் | HDR, Panorama |
வீடியோ | 1080p – 30fps, Gyro-Electronic Image Stabilization |
ஒலி (Sound)
ஒலிபரப்பி (Loudspeaker) | Yes, Stereo Speakers |
3.5mm ஜெக் (Jack) | No |
விபரம் | 24-bit/192kHz Audio |
Realme GT Neo 3 இன் சிறப்பம்சங்கள்
உணரிகள் (Sensors) | In-Display Fingerprint, Gyroscope, Accelerometer, Proximity,
Magnetic Induction Sensor, Light Sensor, Hall Sensor |
நினைவகம் (Memory)
ரேம் | 6GB, 8GB, 12GB |
சேமிப்பகம் | 128GB, 256GB |
Universal Flash Storage 3.1 | |
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) | No |
மின்கலம் (Battery)
வகை | Li-Po 5000mAh (80W Version) / 4500mAh (150W Version)
Non-removable |
மின்னூட்டம் (Charge) | Fast charging 80W, 100% in 32 minutes |
Fast charging 150W, 50% in just 5 minutes |
வலையமைப்பு
தொழினுட்பம் | GSM/CDMA/HSPA/EVDO/LTE/5G |
2ஜி பேண்ட்கள் (2G Bands) | GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2 |
3ஜி பேண்ட்கள் (3G Bands) | HSDPA 850/900/1700 (AWS) 1900/2100 |
4ஜி பேண்ட்கள் (4G Bands) | 1, 2, 3, 4, 5, 7, 8, 18, 19, 26, 28, 34, 38, 39, 40, 41 |
5ஜி பேண்ட்கள் (5G Bands) | 1, 3, 5, 8, 28, 40, 41, 77, 78 SA/NSA |
வேகம் | HSPA 42.2/5.76Mbps, LTE-A, 5G |
இணைப்புகள்
வைஃபை (Wi-Fi) | Wi-Fi 802.11 a/b/g |
புளூடூத் (Bluetooth) | 5.3 |
ஜிபிஎஸ் (GPS) | GPS, A-GPS, GLONASS, Galileo, BeiDou, QZSS |
என்எஃப்சி (NFC) | Yes, 3600 |
யூஎஸ்பி (USB) | USB Type-C 2.0 |
Realme GT Neo 3 இன் பொதுவான அம்சங்கள்
Sim | Dual Sim (Nano-Sim, Dual Stand-by) |
Colors | Plain Black, Silverstone White, LeMans Blue |
வானொலி (Radio) | No |
Realme GT Neo 3 இன் வெளியீடு
அறிவித்த திகதி | 22 March 2022 |
வெளியான திகதி | 30 March 2022 |
இதையும் வாசிக்க:
- Realme 9 Pro இன் முழு விபரங்கள்
- Oppo F21 Pro இன் முழு விபரங்கள்
- Vivo iQOO 9 SE இன் முழு விபரங்கள்
- Oppo Find X5 Pro இன் முழு விபரங்கள்
- Xiaomi Redmi K50 Pro இன் முழு விபரங்கள்
இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com