Samsung Galaxy A73 5G – Full Smartphone Features

Samsung Galaxy A73 5G

சாம்சங் (Samsung) ஆனது A தொடரின் மற்றுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Samsung Galaxy A73 5G எனும் இந்த ஸ்மார்ட்போனானது முற்றிலும் Samsung Galaxy A53 5G இன் தோற்றத்தை போன்றும் பெரும்பாலான அதே அம்சங்களையும் கொண்டுள்ளது.

எனினும், குறிப்பிட்ட சில சிறந்த அம்சங்களையும் கொண்டுள்ளது. அதாவது, கெமரா, சிப்செட் போன்றவை மிக நல்ல தரத்தில் வழங்கப்பட்டுள்ளன. இனி அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் AMOLED+ திரையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும் 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டிருக்கிறது. அத்துடன், இது 393 பிக்செல் அடர்த்தியை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான பகுதி என்னவென்றால் அது இதன் சிப்செட் தான். காரணம், இதற்கு ஸ்னாப்ட்ராகன் 778ஜீ 5ஜீ பொருத்தப்பட்டுள்ளது. அத்தோடு, அட்ரெனா 642எல் என்கிற வரைகலை செயலாக்க அலகும் இணைக்கப்பட்டுள்ளது. இவை இந்த ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்கும் பாகங்கள் என்றே கூற வேண்டும்.

இதன் மையப்பகுதி செயல்திறனானது (Core Performance) 47% வேகமாக உள்ளதோடு வரைகலை செயல்திறன் (Graphic Performance) 82% வேகமாகவும் இருக்கிறது. ஆகவே, மொபைல் விளையாட்டுகளுக்கு (Mobile Games) இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக செயல்படக்கூடியது.

அதேபோல, ஒரே நேரத்தில் பல வேலைகளையும் இந்த ஸ்மார்ட்போனினூடாக செய்ய முடியும்.

நான் முதலில் கூறியது போல், இதன் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் அதன் பின் பக்க கெமரா தான். அதாவது, இந்த ஸ்மார்ட்போனில் பின் பக்கத்தில் 4 கெமராக்கள் உள்ளன. குறிப்பாக பிரதான கெமரா 108MP இனைக் கொண்டிருக்கிறது. அத்துடன், 12MP இனை கொண்ட அல்ட்ராவைட் கெமராவுடன் 5MP இல் டெப்த் கெமராவும் 5MP இல் மெக்ரோ கெமராவும் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றில் மூலம் நல்ல தெளிவான, நன்கு விபரங்களுடன் கூடிய புகைப்படங்களை பெற முடியும். அவற்றோடு, 10 மடங்கு வரை டிஜிட்டல் சூம் (Digital Zoom) செய்யக்கூடிய வசதியும் உண்டு.

சிறந்த வீடியோ பதிவுகளை பெறுவதற்காக வீடியோ டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபலைசேஷன் (Video Digital Image Stabilization) எனும் தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், புகைப்படங்களை தொகுக்கக்கூடிய ஏராளமான வசதிகளையும் வழங்குகிறது இந்த Samsung Galaxy A73 5G ஸ்மார்ட்போன்.

இதற்கு 32MP இனை கொண்ட செல்பி கெமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் நீங்கள் நல்ல புகைப்படங்களை பெற முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் 128GB, 258GB சேமிப்பகங்களில் கிடைக்கின்றது. அவற்றுடன், 6GB, 8GB ஆகிய ரேம் தெரிவுகளில் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Samsung Galaxy A53 5G இல் போன்றே இந்த ஸ்மார்ட்போனிலும் 8GB வரை மெய்நிகர் ரேம் (Virtual RAM) ஆக சேமிப்பகத்தை மாற்றி பயன்படுத்த முடியும்.

மின்கலத்தைப் பற்றி பார்த்தால், 5000mAh அளவுடைய மின்கலம் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதை 2 நாட்கள் வரை சாதாரணமாக பயன்படுத்த முடியும் என தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனிலும் நீங்கள் 5G தொழினுட்பத்தை பயன்படுத்த முடியும்.

Samsung Galaxy A73 5G
Samsung Galaxy A73 5G

 

Samsung Galaxy A73 5G இன் முழு விபரங்கள்

திரை (Display)

வகை Super AMOLED+
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 120Hz
நிட்ஸ் (Nits) 800 Maximum
அளவு 6.7 inches
பிரிதிறன் (Resolution) 1080×2400 Pixels, 20:9 Ratio
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) 393ppi
பாதுகாப்பு Corning Gorilla Glass 5

 

Samsung Galaxy A73 5G இன் அமைப்பு விபரங்கள்

நீளம் 163.7mm (6.44 inches)
அகலம் 76.1mm (3.00 inches)
உயரம் 7.6mm (0.30 inch)
நிறை 181g
கட்டுமானப் பொருள் Not mentioned
பாதுகாப்பு IP67 Dust and Water Resistant (Up to 1m for 30 minutes)

 

தளம்

இயக்க முறைமை (Operating System) Android 12
பயனர் இடைமுகம் (User Interface) One UI 4.1
சிப்செட் (Chipset) Qualcomm SM7325 Snapdragon 778 G 5G (6nm)
செயலி (Processor) Octa-core (4×2.4GHz Kyro 670 & 4×1.8GHz Kyro 670)
வரைகலை செயலாக்க அலகு (GPU) Adreno 642L

 

பின் பக்க கெமரா

கெமரா 108MP, f/1.8 (Wide), Phase Detection Autofocus,
12MP, f/2.2 (Ultrawide)
5MP, f/2.4, (Macro)
5MP, f/2.4 (Depth)
சிறப்பம்சங்கள் LED Flash, Panorama, HDR, Optical Image Stabilization, Video

Digital Image Stabilization Up to 10x Digital Zoom

வீடியோ 4K – 30fps, 1080p – 30/60fps

 

முன் பக்க கெமரா

கெமரா 32MP, f/2.2, 26mm (Wide), 1/2.8”, 0.8µm
சிறப்பம்சங்கள் HDR
வீடியோ 4K – 30fps, 1080p – 30fps

 

ஒலி (Sound)

ஒலிபரப்பி (Loudspeaker) Yes
3.5mm ஜெக் (Jack) Not mentioned

 

Samsung Galaxy A73 5G இன் சிறப்பம்சங்கள்

உணரிகள் (Sensors) Fingerprint (Under Display, Optical), Gyroscope, Proximity,

Accelerometer, Compass, Ambient Light

 

நினைவகம் (Memory)

ரேம் 6GB, 8GB
சேமிப்பகம் 128GB, 256GB
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) MictoSDXC (Up to 1TB)

 

மின்கலம் (Battery)

வகை Li-Po 5000mAh, non-removable
மின்னூட்டம் (Charge) Fast charging 25W

 

வலையமைப்பு

தொழினுட்பம் GSM/HSPA/LTE/5G
2ஜி பேண்ட்கள் (2G Bands) GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2 (Dual-Sim

Model only)

3ஜி பேண்ட்கள் (3G Bands) HSDPA 850/900/1700 (AWS) 1900/2100
4ஜி பேண்ட்கள் (4G Bands) LTE
5ஜி பேண்ட்கள் (5G Bands) SA/NSA
வேகம் HSPA 42.2/5.76Mbps, LTE-A

 

இணைப்புகள்

வைஃபை (Wi-Fi) WI-Fi 802.11 a/b/g/n/ac/ax, Dual-band, Wi-Fi Direct, Hotspot
புளூடூத் (Bluetooth) 5.0, A2DP, LE
ஜிபிஎஸ் (GPS) GPS, A-GPS, GLONASS, Galileo, Beidou, QZSS
என்எஃப்சி (NFC) Yes (Depend on Market/Region)
யூஎஸ்பி (USB) USB Type-C 2.0, USB On-The-Go

 

Samsung Galaxy A73 5G இன் பொதுவான அம்சங்கள்

Sim Single Sim (Nano Sim) or Hybrid Dual Sim (Nano Sim, Dual

Stand-by)

Colors Gray, Mint, White
வானொலி (Radio) Not mentioned

 

Samsung Galaxy A73 5G இன் வெளியீடு

அறிவித்த திகதி 17 March 2022
வெளியான திகதி 01 April 2022

 

மேலும் வாசிக்க: 

 

இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top