சாம்சங் (Samsung) நிறுவனம் A தொடரின் புதிய Samsung Galaxy A53 5G இனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பல புதிய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED திரை பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டுள்ளது. 6.5 அங்குலத்தை கொண்ட இந்த திரையானது நீல ஒளியை குறைப்பதோடு 800 நிட்ஸ் வரை பயன்படுத்தக்கூடியது. ஆகவே, வெளிச்சமான வெளிப்புறத்திலும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
மேலும், பாதுகாப்புக்காக கோர்னிங் கொரில்லா கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தூசியிலிருந்து பாதுக்காக்கப்படுவதோடு, நீர் உட்புகாதவாறு ஒரு மீட்டர் ஆழம் வரை 30 நிமிடங்களுக்கு வைத்திருக்க முடியும். இது ஒரு சிறந்த அம்சம் என குறிப்பிட முடியும்.
Samsung Galaxy A53 5G ஆனது தற்போது உள்ள முதன்மையான இயங்குதளமான ஆண்ட்ரொய்ட் 12 இல் இயங்கக்கூடியது. அத்துடன், வன் யூஐ 4.1 பயனர் இடைமுகத்தை கொண்டுள்ளது.
எனினும், எக்ஸினோஸ் 1280 சிப்செட் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மாலி ஜீ68 வரைகலை செயலாக்க அலகும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் மையப்பகுதி செயல்திறன் (Core Performance) வேகம் 6% வரை அதிகமாக உள்ளதோடு 33% வரை வரைகலை செயல்திறன் (Graphic Performance) வேகம் அதிகமாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் பின் பக்கத்தில் 4 கெமராக்கள் உள்ளன. பிரதான கெமராவாக 64MP அளவுடைய கெமரா பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், 12MP கொண்ட அல்ட்ராவைட் கெமராவும் 5MP உடைய மெக்ரோ கெமராவும் 5MP அளவுடைய டெப்த் கெமராவும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த 4 கெமராக்களின் துணையுடன் மிக தெளிவான, அழகான புகைப்படங்களை பெற முடியும். மேலும், குறைவான வெளிச்சத்திலும் நல்ல தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும்.
முன் பக்க கெமராவை பொருத்தவரையில், 32MP கொண்ட கெமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 128GB, 256GB சேமிப்பகங்களில் கிடைக்கக்கூடியதாக இருக்கும். எனினும், 1TB வரையான வெளிப்புற நினைவகத்தை பயன்படுத்த முடியும்.
Samsung Galaxy A53 5G இன் ரேம் இனை பற்றி கவனித்து பார்த்தால், இந்த போன் 6GB, 8GB அளவு கொண்ட ரேம்களில் வெளியாகியுள்ளது. இருந்தபோதிலும், 16GB வரை ரேம்மை அதிகரிக்க முடியும் என உத்தியோகபூர்வமாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அது எவ்வாறு என்று பார்த்தால், 6GB உடைய போனில் மேலும் 6GB வரையும், 8GB கொண்ட போனில் மேலும் 8GB வரையும் உள்ளக சேமிப்பத்தை மெய்நிகர் நினைவகமாக (Virtual Memory) பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஸ்மார்ட்போனிற்கு 5000mAh அளவுடைய மின்கலம் பொருத்தப்பட்டிருக்கிறது. இதை ஒரு சாதாரண பாவணையாளரினால் 2 நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போனின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் 5G தொழினுட்பம் வழங்கப்பட்டுள்ளது தான்.
Samsung Galaxy A53 5G இன் முழு விபரங்கள்
திரை (Display)
வகை | Super AMOLED |
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) | 120Hz |
நிட்ஸ் (Nits) | 800 |
அளவு | 6.5 inches |
பிரிதிறன் (Resolution) | 1080×2400 Pixels, 20:9 Ratio |
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) | 405ppi |
பாதுகாப்பு | Corning Gorilla Glass 5 |
Samsung Galaxy A53 5G இன் அமைப்பு விபரங்கள்
நீளம் | 159mm (6.28 inches) |
அகலம் | 74.8mm (2.94 inches) |
உயரம் | 8.1mm (0.32 inches) |
நிறை | 189g |
கட்டுமானப் பொருள் | Not mentioned |
பாதுகாப்பு | IP67 Dust and Water Resistant (Up to 1m for 30 minutes) |
தளம்
இயக்க முறைமை (Operating System) | Android 12 |
பயனர் இடைமுகம் (User Interface) | One UI 4.1 |
சிப்செட் (Chipset) | Exynos 1280 (5nm) |
செயலி (Processor) | Octa-core (2×2.4GHz Cortex-A78 & 6×2.0GHz Cortex-A55) |
வரைகலை செயலாக்க அலகு (GPU) | Mali-G68 |
பின் பக்க கெமரா
கெமரா | 64MP, f/1.8, 26mm (Wide), 1/1.7X”, 0.8µm, Phase Detection
Autofocus, Optical Image Stabilization |
12MP, f/2.2, 1230 (Ultrawide), 1.12µm | |
5MP, f/2.4 (Macro) | |
5MP, f/2.4 (Depth) | |
சிறப்பம்சங்கள் | LED Flash, Panorama, HDR |
வீடியோ | 4K – 30fps, 1080p – 30/60fps, Gyro Electronic Image
Stabilization |
முன் பக்க கெமரா
கெமரா | 32MP, f/2.2, 26mm (Wide), 1/2.8”, 0.8µm |
சிறப்பம்சங்கள் | HDR |
வீடியோ | 4K – 30fps, 1080p – 30fps |
ஒலி (Sound)
ஒலிபரப்பி (Loudspeaker) | Yes, Stereo Speakers |
3.5mm ஜெக் (Jack) | No |
Samsung Galaxy A53 5G இன் சிறப்பம்சங்கள்
உணரிகள் (Sensors) | Fingerprint (Under Display, Optical), Gyroscope, Compass,
Accelerometer, Barometer, Virtual Proximity Sensing |
நினைவகம் (Memory)
ரேம் | 4GB, 6GB, 8GB |
சேமிப்பகம் | 128GB, 258GB |
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) | MicroSDXC |
மின்கலம் (Battery)
வகை | Li-Po 5000mAh, non-removable |
மின்னூட்டம் (Charge) | Fast charging 25W |
வலையமைப்பு
தொழினுட்பம் | GSM/HSPA/LTE/5G |
2ஜி பேண்ட்கள் (2G Bands) | GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2 (Dual-Sim
model only) |
3ஜி பேண்ட்கள் (3G Bands) | HSDPA 850/900/1700 (AWS) 1900/2100 |
4ஜி பேண்ட்கள் (4G Bands) | 1, 2, 3, 4, 5, 7, 12, 14, 20, 29, 30, 38, 39, 40, 41, 46, 48, 66 –
SM-A536U |
1, 2, 3, 4, 5, 7, 12, 13, 20, 28, 46, 48, 66 – SM-A536V | |
5ஜி பேண்ட்கள் (5G Bands) | 2, 5, 41, 66, 77, 78 SA/NSA/Sub6/mmWave – SM-A536U |
2, 5, 48, 66, 77, 78, 260, 261 SA/NSA/Sub6/mmWave –
SM-A536V |
|
வேகம் | HSPA 42.2/5.76Mbps, LTE-A, 5G |
இணைப்புகள்
வைஃபை (Wi-Fi) | Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dual-band, Wi-Fi Direct, Hotspot |
புளூடூத் (Bluetooth) | 5.1, A2DP, LE |
ஜிபிஎஸ் (GPS) | GPS, A-GPS, GLONASS, Galileo, BDS |
என்எஃப்சி (NFC) | Yes (Depend on Market/Region) |
யூஎஸ்பி (USB) | USB Type-C 2.0, USB On-The-Go |
Samsung Galaxy A53 5G இன் பொதுவான அம்சங்கள்
Sim | Single Sim (Nano Sim) or Hybrid Dual Sim (Nano Sim,
Dual Stand-by) |
Colors | Black, White, Blue, Peach |
வானொலி (Radio) | Not mentioned |
Samsung Galaxy A53 5G இன் வெளியீடு
அறிவித்த திகதி | 17 March 2022 |
வெளியான திகதி | 24 March 2022 |
இதையும் வாசிக்க:
- Xiaomi Poco M4 Pro இன் முழு விபரங்கள்
- Apple iPhone SE 2022 இன் முழு விபரங்கள்
- Samsung Galaxy S22 Ultra 5G இன் முழு விபரங்கள்
இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com