ஷியோமி (Xiaomi) தனது போகோ (Poco) M தொடரின் அடுத்த ஸ்மார்ட்போனான Xiaomi Poco M4 Pro இனை வெளியிட்டுள்ளது. இது பல புதிய அம்சங்களை கொண்டுள்ள ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாகும்.
இனி, இந்த ஸ்மார்ட்போன் பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் திரையை பற்றி பார்த்தோமானால் இதற்கு AMOLED திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது 90Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட திரையாகும்.
இந்த திரையானது அதிகபட்சமாக 1000 நிட்ஸ்களை கொண்டது. ஆகவே, அதிக வெளிச்சமான இடமாக இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போனை இலகுவாக பயன்படுத்த முடியும்.
குறிப்பாக இந்த திரையானது நீல ஒளியிலிருந்து கண்ணை பாதுகாப்பதற்காக விசேடமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உலகின் முன்னணி நற்சான்றிதழ் வழங்கும் நிறுவனமான SGS இனால் இந்த திரைக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த எஃப்எச்டி (Full High Definition) திரையானது 180Hz தொடு மாதிரி விகிதத்தில் இயங்கக்கூடியது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ரொய்ட் 11 இல் இயங்கக்கூடியது. மேலும், எம்ஐயூஐ 13 எனும் பயணர் இடைமுகத்தை கொண்ட இந்த போனிற்கு மீடியாடெக் ஹேலியோ ஜீ96 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு ஆற்றல்மிக்க சிப்செட் ஆக இருந்தாலும் கூட ஸ்னாப்ட்ராகனுடன் ஒப்பிடும் பொழுது ஆற்றல் சற்று குறைவுதான்.
இதற்கு, மாலி ஜீ57 எம்சீ2 எனும் வரைகலை செயலாக்க அலகு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் லிக்விட்கூல் டெக்னாலஜி 1.0 பிளஸ் (LiquidCool Technology 1.0 Plus) எனும் தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் கனமான வேலைகளை செய்தாலும் கூட போன் வெப்பமாவது குறைக்கப்படுகிறது. இது உண்மையிலேயே ஒரு சிறந்த விடயம் என்றே கூற வேண்டும்.
இனி, கெமரா பற்றி பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் பின் பக்கத்தில் 3 கெமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதான கெமராவாக 64MP கெமரா பொருத்தப்பட்டுள்ளது. அத்தோடு, 8MP உடைய அல்ட்ராவைட் கெமராவும் 2MP கொண்ட மெக்ரோ கெமராவும் இணைக்கப்பட்டுள்ளன.
16MP அளவு கொண்ட கெமரா முன் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. கெமராக்களை பொருத்தவரையில், சாதாரணமாக ஒரு நல்ல தரத்தில் போட்டோக்களையும் வீடியோக்களையும் பெற முடியும்.
6GB, 8GB ரேம் அளவுகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனானது 64GB, 128GB, 256GB ஆகிய அளவு கொண்ட சேமிப்பகங்களில் பெறக்கூடியதாக இருக்கும்.
Xiaomi Poco M4 Pro இல் 5000mAh அளவுடைய மின்கலம் இணைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேர பாவணைக்கு இந்த போன் உதவியாக இருக்கும். மேலும், 33W இல் விரைவாக மின்னூட்டல் செய்யக்கூடிய வசதியும் உண்டு.
இவ்வளவு சிறப்பம்சங்களுடன் உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5G தொழினுட்பம் இல்லை என்பது தான் கவலையான விடயம்.
Xiaomi Poco M4 Pro இன் முழு விபரங்கள்
திரை (Display)
வகை | FHD+ AMOLED DotDisplay |
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) | 90Hz |
நிட்ஸ் (Nits) | 1000 Maximum |
அளவு | 6.43 inches |
பிரிதிறன் (Resolution) | 1080×2400 Pixels 20:9 Ratio |
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) | 409ppi |
பாதுகாப்பு | Corning Gorilla Glass 3 |
Xiaomi Poco M4 Pro இன் அமைப்பு விபரங்கள்
நீளம் | 159.87mm (6.29 inches) |
அகலம் | 73.87mm (2.90 inches) |
உயரம் | 8.09mm (0.31 inches) |
நிறை | 179.5g |
கட்டுமானப் பொருள் | Front – Gorilla Glass 3, Frame – Plastic, Back – Plastic |
பாதுகாப்பு | IP53, Dust and Splash Resistant |
தளம்
இயக்க முறைமை (Operating System) | Android 11 |
பயனர் இடைமுகம் (User Interface) | MIUI 13 |
சிப்செட் (Chipset) | Mediatek Helio G96 (12nm) |
செயலி (Processor) | Octa-core (2×2.05GHz Cortex-A76 & 6×2.0GHz Cortex-A55) |
வரைகலை செயலாக்க அலகு (GPU) | Mali-G57 MC2 |
பின் பக்க கெமரா
கெமரா | 64MP, f/1.8, 26mm (Wide), 07µm, Phase Detection Autofocus |
8MP, f/2.2, 1180 (Ultrawide), ¼”, 1.12µm | |
2MP, f/2.4, (Macro) | |
சிறப்பம்சங்கள் | LED Flash, HDR, Panorama |
வீடியோ | 1080p – 30fps |
முன் பக்க கெமரா
கெமரா | 16MP, f/2.5 (Wide), 1/3.06”, 1.0µm |
சிறப்பம்சங்கள் | HDR |
வீடியோ | 1080p – 30fps |
ஒலி (Sound)
ஒலிபரப்பி (Loudspeaker) | Yes, Stereo Speakers |
3.5mm ஜெக் (Jack) | Yes |
விபரம் | 24-bit/192kHz Audio |
Xiaomi Poco M4 Pro இன் சிறப்பம்சங்கள்
உணரிகள் (Sensors) | Fingerprint (Side-mounted), AI Face Unlock Gyroscope,
Accelerometer, Proximity, Ambient Light, Compass, IR Blaster |
நினைவகம் (Memory)
ரேம் | 6GB, 8GB |
சேமிப்பகம் | 64GB, 128GB, 256GB |
Universal Flash Storage 2.2 | |
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) | MicroSDXC |
மின்கலம் (Battery)
வகை | Li-Po 5000mAh, non-removable |
மின்னூட்டம் (Charge) | Fast charging 33W |
Power Delivery 3.0 | |
Quick Charge 3+ |
வலையமைப்பு
தொழிநுட்பம் | GSM/HSPA/LTE |
2ஜி பேண்ட்கள் (2G Bands) | GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2 |
3ஜி பேண்ட்கள் (3G Bands) | HSDPA 850/900/1700(AWS) 1900/2100 – International |
HSDPA 850/900/1900/2100 – India | |
4ஜி பேண்ட்கள் (4G Bands) | 1 2 3 4 5 7 8 20 28 38 40 41 -International |
1 3 5 8 40 41 – India | |
வேகம் | HSPA 42.2/5.76Mbps, LTE-A (CA) |
இணைப்புகள்
வைஃபை (Wi-Fi) | Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dual-band, Wi-Fi Direct, Hotspot |
புளூடூத் (Bluetooth) | 5.0, A2DP, LE |
ஜிபிஎஸ் (GPS) | GPS-L1, A-GPS, GLONASS-G1, Galileo-E1, BeiDou-B1 |
என்எஃப்சி (NFC) | Yes |
யூஎஸ்பி (USB) | USB Type-C 2.0, USB On-The-Go |
Xiaomi Poco M4 Pro இன் பொதுவான அம்சங்கள்
Sim | Dual Sim (Nano Sim, Dual Stand-by) |
Colors | Power Black, Poco Yellow, Cool Blue |
வானொலி (Radio) | FM Radio, |
Xiaomi Poco M4 Pro வெளியீடு
அறிவித்த திகதி | 28 February 2022 |
வெளியான திகதி | 16 March 2022 |
இதையும் வாசிக்க:
- Realme 9 Pro இன் முழு விபரங்கள்
- Apple iPhone SE 2022 இன் முழு விபரங்கள்
- Xiaomi Redmi Note 11 Pro 5G இன் முழு விபரங்கள்
- Samsung Galaxy S22 Ultra 5G இன் முழு விபரங்கள்
இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com