Xiaomi Redmi Note 11 Pro 5G ஆனது நோட் (Note) தொடரில் ஷியோமி (Xiaomi) வெளியிட்ட மற்றுமொரு ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது, இதை Xiaomi Redmi Note 11, Xiaomi Redmi Note 11 Pro ஆகியவற்றின் அடுத்த வெளியீடு என்று கூறலாம்.
இவற்றை விட Xiaomi Redmi Note 11 Pro 5G ஆனது சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது. இனி இந்த போன் பற்றி விரிவாக பார்ப்போம்.
முதலில் அதன் திரையின் சிறப்பு பற்றி பார்க்கலாம். இது ஒரு சூப்பர் AMOLED திரை ஆகும். அதிகபட்சமாக 1200 நிட்ஸ்களை கொண்ட ஒரு சன்லைட் (Sunlight) திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
இதை பற்றி இன்னும் தெளிவாக கூறினால், எவ்வளவு வெளிச்சமான இடமாக இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போனை உங்களால் பயன்படுத்த முடியும்.
120Hz புதுப்பிப்பு விகிதத்தை இது கொண்டிருப்பதால், ஸ்க்ரோல் (Scroll) செய்யும் பொழுது மிக இலகுவாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ராகன் 695 5G எனும் சிறந்த ஒரு சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முதல் வந்த Xiaomi Redmi Note 11, Xiaomi Redmi Note 11 Pro ஆகியவற்றின் சிப்செட்டை விட இது சிறப்பான சிப்செட் ஆகும்.
எம்ஐயூஐ 13 பயனர் இடைமுகத்துடன் கூடிய ஆண்ட்ரொய்ட் 11 இயக்க முறைமையில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.
இந்த போனின் பின் பக்கத்தில் 3 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 108MP இனை கொண்ட பிரதான கெமராவுடன் 8MP உடைய அல்ட்ராவைட் கெமராவும் 2MP உடைய மெக்ரோ கெமராவும் இதற்கு பொருத்தப்பட்டுள்ளது.
முன் பக்க கெமராவைப் பற்றி பார்த்தோமானால் 16MP இனை கொண்ட வைட் (Wide) கெமரா பொருத்தப்பட்டுள்ளது.
நாம் சில கனமான வேலைகளை செய்ய ரேம் அதிகமாக தேவைப்படும். அந்த தேவையை இந்த ஸ்மார்ட்போன் பூர்த்திசெய்யும். ஆம்! 6GB, 8GB ஆகிய ரேம்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆகவே உங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் நீங்கள் தெரிவு செய்துகொள்ள முடியும்.
அத்துடன் 64GB, 128GB சேமிப்பகங்களிலும் பெற முடியும்.
அடுத்து, போனின் முக்கிய பகுதியான மின்கலத்தை பற்றி சற்று கவனிப்போம். இதற்கு 5000mAh இனைக் கொண்ட மின்கலம் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த மின்கலமானது 15 நிமிடத்தில் வேகமாக 50% மின்னூட்டப்படுவதோடு 42 நிமிடத்தில் 100% முழுமையாக மின்னூட்டப்படுகிறது.
நீண்ட நேரமாக போன் பயன்படுத்துவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏனென்றால், காரியாலய வேலைகளாக இருக்கட்டும், நமது சொந்த வேலைளாக இருக்கட்டும், அனேகமான வேலைகளை நாம் போனிலேயே தான் செய்கிறோம். அதற்கு மின் சக்தியை அதிகமாக சேமிக்கின்ற மின்கலத்தை கொண்ட ஒரு போன் அவசியம் வேண்டும். அதற்கான ஒரு சிறந்த தீர்வாக இந்த போன் அமையும்.
மேலும், இது சிறந்த செயலியுடன் கூடிய செயல்திறன் மிக்க ஸ்மார்ட்போனாக காணப்படுகிறது.
Xiaomi Redmi Note 11 Pro 5G இன் முழு விபரங்கள்
திரை (Display)
வகை | Super AMOLED, HDR10 |
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) | 120Hz |
நிட்ஸ் (Nits) | 1200 (Maximum) |
அளவு | 6.67 inches |
பிரிதிறன் (Resolution) | 1080×2400 Pixels |
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) | 395ppi |
பாதுகாப்பு | Corning Gorilla Glass 5 |
Xiaomi Redmi Note 11 Pro 5G இன் அமைப்பு விபரங்கள்
நீளம் | 164.2mm (6.46 inches) |
அகலம் | 76.1mm (3.0 inches) |
உயரம் | 8.1mm (0.32 inches) |
நிறை | 202g |
கட்டுமானப் பொருள் | Front – Glass, Back – Glass |
பாதுகாப்பு | IP53, Dust, and Splash protection |
தளம்
இயக்க முறைமை (Operating System) | Android 11 |
பயனர் இடைமுகம் (User Interface) | MIUI 13 |
சிப்செட் (Chipset) | Qualcomm SM6375 Snapdragon 695 5G (6nm) |
செயலி (Processor) | Octa-core (2×2.2GHz Kyro 660 Gold & 6×1.7GHz Kyro 660 Silver) |
வரைகலை செயலாக்க அலகு (GPU) | Adreno 619 |
பின் பக்க கெமரா
கெமரா | 108MP, f/1.9, 26mm (Wide), 1/1.52”, 0.7µm, Phase Detection
Autofocus |
8MP, f/2.2, 1180 (Ultrawide) | |
2MP, f/2.4 (Macro) | |
சிறப்பம்சங்கள் | LED Flash, HDR, Panorama |
வீடியோ | 1080p – 30fps |
முன் பக்க கெமரா
கெமரா | 16MP, f/2.4 (Wide) |
வீடியோ | 1080p – 30fps |
ஒலி (Sound)
ஒலிபரப்பி (Loudspeaker) | Yes, with stereo speakers |
3.5mm ஜெக் (Jack) | Yes |
விபரம் | 24-bit/192kHz Audio |
Xiaomi Redmi Note 11 Pro 5G இன் சிறப்பம்சங்கள்
உணரிகள் (Sensors) | Fingerprint (Side-mounted), Gyroscope, Accelerometer,
Proximity, Compass, Ambient Light, IR Blaster |
நினைவகம் (Memory)
ரேம் | 6GB, 8GB |
சேமிப்பகம் | 64GB, 128GB |
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) | MicroSDXC up to 1TB |
மின்கலம் (Battery)
வகை | Li-Po 5000mAh, non-removable |
மின்னூட்டம் (Charge) | Fast charging 67W, 50% in just 15 minutes, 100% in 42 minutes |
Power Delivery 3.0 | |
Quick Charge 3+ |
வலையமைப்பு
தொழிநுட்பம் | GSM/HSPA/LTE/5G |
2ஜி பேண்ட்கள் (2G Bands) | GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2 |
3ஜி பேண்ட்கள் (3G Bands) | HSDPA 800/850/900/1900/2100 |
4ஜி பேண்ட்கள் (4G Bands) | 1, 2, 3, 4, 5, 7, 8, 12, 13, 17, 18, 19, 20, 26, 28, 32, 38, 40, 41, 66 |
5ஜி பேண்ட்கள் (5G Bands) | 1, 3, 5, 7, 8, 20, 28, 38, 40, 41, 66, 77 78 SA/NSA |
வேகம் | HSPA 42.2/5.76Mbps, LTE-A (CA), 5G |
இணைப்புகள்
வைஃபை (Wi-Fi) | Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dual-band, Wi-Fi Direct, Hotspot |
புளூடூத் (Bluetooth) | 5.1, A2DP, LE |
ஜிபிஎஸ் (GPS) | GPS L1, A-GPS, GLONASS G1, Galileo E1, BDS B1 |
என்எஃப்சி (NFC) | Yes (Depend on market/region) |
யூஎஸ்பி (USB) | USB Type-C 2.0, USB On-The-Go |
Xiaomi Redmi Note 11 Pro 5G இன் பொதுவான அம்சங்கள்
Sim | Hybrid Dual Sim (Nano Sim, Dual stand-by) |
Colors | Graphite Gray, Polar White, Atlantic Blue |
வானொலி (Radio) | குறிப்பிடப்படவில்லை |
Xiaomi Redmi Note 11 Pro 5G இன் வெளியீடு
அறிவித்த திகதி | 26 January 2022 |
வெளியான திகதி | 18 February 2022 |
இதையும் வாசிக்க:
- Nokia G21 இன் முழு விபரங்கள்
- OnePlus Nord CE 2 5G இன் முழு விபரங்கள்
- Samsung Galaxy S22 Ultra 5G இன் முழு விபரங்கள்
இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com