வன்ப்ளஸ் டெக்னாலஜி (OnePlus Technology) எனும் சீன நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நோர்ட் தொடரில் (Nord Series) அடங்கும் OnePlus Nord CE 2 5G எனும் ஸ்மார்ட்போன் ஆகும்.
இது 90Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட AMOLED திரையை கொண்டிருக்கிறது. எனினும் இதன் நிட்ஸ் அளவு பற்றிய உத்தியோகபூர்வமான எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.
6.43 அங்குலம் அளவு கொண்ட திரையை இது கொண்டிருக்கிறது. 409 பிக்செல் அடர்த்தியை உடை இந்த திரைக்கு கோர்னிங் கொரில்லா கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.
173g நிறையை கொண்டுள்ள இந்த போனின் கட்டுமானப் பொருள் பற்றிய விபரமும் அறிவிக்கப்படவில்லை. இருந்தபொழுதிலும் முன் பக்ககத்திற்கு மாத்திரம் கோர்னிங் கொரில்ல கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த போனானது ஆண்ட்ரொய்ட் 11 இனை அடிப்படையாக கொண்ட ஒக்சிஜன்ஓஎஸ் எனும் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதற்கு மீடியாடெக் MT6877 எனும் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
இது பின் பக்கத்தில் 3 கெமராக்களை கொண்டுள்ளதோடு பிரதான கெமரா 64MP இனை கொண்டிருக்கிறது.
மேலும், 8MP உடைய அல்ட்ராவைட் கெமராவும் 2MP உடைய மெக்ரோ கெமராவும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கெமராக்கள் மூலம் 4K தரம் வரை வீடியோக்களை பதிவு செய்ய முடியும். முன் பக்க கெமரா பற்றி பார்த்தால், அது 16MP இனை கொண்டிருக்கிறது.
இது 128GB சேமிப்பகத்துடன் 6GB, 8GB ரேம்களில் கிடைக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனானது 4500mAh இனை கொண்ட லிதிய மின்கலத்துடன் தயாரிக்கப்படுள்ளது. அத்துடன், எதிர்புற மின்னூட்டல் வசதியையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் சாதாரணமாக தினசரி பாவணைக்கு சிறப்பாக இருக்கும்.
OnePlus Nord CE 2 5G இன் முழு விபரங்கள்
திரை (Display)
வகை | AMOLED, HDR10+ |
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) | 90Hz |
நிட்ஸ் (Nits) | குறிப்பிடப்படவில்லை |
அளவு | 6.43 inches, 99.8cm2 |
பிரிதிறன் (Resolution) | 1080×2400 Pixels, Aspect Ratio: 20:9 |
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) | 409ppi |
பாதுகாப்பு | Corning Gorilla Glass 5 |
OnePlus Nord CE 2 5G இன் அமைப்பு விபரங்கள்
நீளம் | 160.6mm (6.32 inches) |
அகலம் | 73.2mm (2.88 inches) |
உயரம் | 7.8mm (0.31 inches) |
நிறை | 173g |
கட்டுமானப் பொருள் | Front – Corning Gorilla Glass 5 |
தளம்
இயக்க முறைமை (Operating System) | OxygenOS based on Android 11 |
சிப்செட் (Chipset) | MediaTek MT6877, Dimensity 900 5G (6nm) |
செயலி (Processor) | Octa-core (2×2.4GHz Cortex-A78 & 6×2.0GHz Cortex-A55) |
வரைகலை செயலாக்க அலகு (GPU) | Mali-G68 MC4 |
பின் பக்க கெமரா
கெமரா | 64MP, f/1.8, 26mm (Wide), 1/1.97”, 0.7µm, Phase Detection
Autofocus, Continuous Autofocus |
8MP, f/2.2, 1190 (Ultrawide) | |
2MP, f/2.4 (Macro) | |
சிறப்பம்சங்கள் | LED Flash, HDR, Panorama, AI Scene Enhancement, AI
Highlight Video, Dual-view Video |
வீடியோ | 4K – 30fps, 1080 – 30/60/120fps, Gyro-EIS |
முன் பக்க கெமரா
கெமரா | 16MP, Sony IMX471, f/2.4, 27mm (Wide), 1.0µm |
சிறப்பம்சங்கள் | HDR, Screen Flash, AI Highlight Video |
வீடியோ | 1080 – 30/60fps, Gyro-EIS |
ஒலி (Sound)
ஒலிபரப்பி (Loudspeaker) | Yes |
3.5mm ஜெக் (Jack) | Yes |
OnePlus Nord CE 2 5G இன் சிறப்பம்சங்கள்
உணரிகள் (Sensors) | Fingerprint (Under Display, Optical), Gyroscope,
Accelerometer, Proximity, Compass, Ambient Light, Sencer Core |
நினைவகம் (Memory)
ரேம் | 6GB, 8GB |
சேமிப்பகம் | 128GB |
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) | MicroSD |
மின்கலம் (Battery)
வகை | Li-Po 4500mAh, non-removable |
மின்னூட்டம் (Charge) | Fast Charging 65W |
Reverse charging |
வலையமைப்பு
தொழிநுட்பம் | GSM/HSPA/LTE/5G |
2ஜி பேண்ட்கள் (2G Bands) | GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2 |
3ஜி பேண்ட்கள் (3G Bands) | HSDPA 850/900/1700(AWS) 1900/2100 |
4ஜி பேண்ட்கள் (4G Bands) | 1, 2, 3, 4, 5, 7, 8, 12, 17, 18, 19, 20, 26, 28, 38, 39, 40, 41,
66 – Europe |
1, 2, 3, 4, 5, 7, 8, 38, 39, 40, 41- India | |
5ஜி பேண்ட்கள் (5G Bands) | 1, 3, 5, 7, 8, 20, 28, 38, 40, 41, 66, 77, 78 SA/NSA – Europe |
1, 3, 5, 8, 40, 41, 77, 78 SA/NSA – India | |
வேகம் | HSPA 42.2/5.76Mbps, LTE-A (CA) Cat18 1200/150Mbps, 5G |
இணைப்புகள்
வைஃபை (Wi-Fi) | Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, Dual-band, Wi-Fi Direct, Hotspot |
புளூடூத் (Bluetooth) | 5.2, A2DP, LE, aptX, aptX HD, LDAC, AAC, SBC |
ஜிபிஎஸ் (GPS) | GPS, A-GPS, GLONASS, Galileo, BDS, QZSS |
என்எஃப்சி (NFC) | Yes |
யூஎஸ்பி (USB) | USB Type-C 2.0, USB On-The-Go |
OnePlus Nord CE 2 5G இன் பொதுவான அம்சங்கள்
Sim | Dual Sim (Nano Sim, Dual stand-by) |
Colors | Gray Mirror, Bahama Blue |
வானொலி (Radio) | குறிப்பிடப்படவில்லை |
OnePlus Nord CE 2 5G இன் வெளியீடு
அறிவித்த திகதி | 17 February 2022 |
வெளியான திகதி | 22 February 2022 |
இதையும் வாசிக்க:
- Nokia G21 இன் முழு விபரங்கள்
- Xiaomi Redmi Note 11 இன் முழு விபரங்கள்
- Samsung Galaxy S22 Ultra 5G இன் முழு விபரங்கள்
இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com