இயற்கை அன்னை ஈன்றெடுத்த செல்வங்களுள் அற்புதமான செல்வம் மரங்களாகும். இந்த இயற்கை வளம் இன்றி அமையாது எதுவும். சகலதும் மரங்களை சார்ந்தே நிகழும்; மரங்களை சார்ந்தே இருக்கும்.
ஒரு மரம், இரு மரம் இன்றி பல்லாயிரக்கனக்கான தாவரங்களை கொண்டு அமைந்ததே காடுகளாகும். ஒவ்வொரு மரமும் ஒரு சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்கும்.
ஆகவே நாமும் மரம் வளர்ப்போம் (Grow a Tree in Tamil) என்று நினைத்து செயல்பட வேண்டும். காரணம் மரங்களே இப்பூமியின் மூச்சாகும்.
மரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக திகழ்கின்றன.
ஏனெனில், ஐந்தறிவு படைத்த ஜீவன்கள் முதல் ஆறறிவு கொண்ட மானிடன் வரை அனைவரும் சுவாசிப்பதற்கு தேவையான ஒட்சிசனை தருவது இம்மரங்களே என்பதனாலாகும்.
இந்த நிலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், உயிரற்ற பொருள்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
ஆனால், இத்தாவரப் போர்வை இல்லையேல் பூமியில் உயிரினங்கள் இல்லை என்றால் அதில் எவ்வித பொய்யுமில்லை.
இனி மரங்களின் முக்கியத்துவம் பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றியும் பார்க்கலாம் வாருங்கள்.
மரத்தின் பயன்கள் – Grow a Tree in Tamil
பூமியைப் பொருத்தவரையில் மரங்கள் இல்லையேல் பூமி பாலைவனமே. பாலைவனத்தை கூட சோலைவனங்களாக்கும் வல்லமை மரங்களிற்கு உண்டு.
மரங்கள் காபனீரொட்சைட்டை உட்சுவாசித்து ஒட்சிசனை வெளியிடுவதனாலேயே நாம் தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது. அத்துடன் மரங்கள் வளியை தூய்மைபடுத்துகின்றன.
சூழலிலுள்ள வெப்பத்தை தனித்து குளிர்மையான காற்றை மரங்கள் எமக்குத் தந்துதவுகின்றன.
இயற்கையின் விலைமதிக்க முடியாத இன்னோர் செல்வம் நீர் ஆகும். பூமிக்குத் தேவையான நீரை பெற்றுத்தருவதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரங்கள் இருப்பதால் தான் புவிக்கு மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.
சூழல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சியடையச் செய்யும் மழையானது மரங்கள் பெருமளவு இருப்பதனாலேயே பூமிக்கு கிடைக்கிறது.
மேலும், மழையாக பொழிந்து நிலத்தடி நீராக ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்றுகள் மரங்களினாலேயே வற்றாது நிலத்தடியிலே சேமிக்கப்படுகின்றன. இதனால் மரங்களிற்கு தேவையான நீரும் குறைவின்றி கிடைக்க உதவியாக அமைகிறது.
மரங்கள் தனது நிறையிலிருந்து 50% திற்கு சற்று குறைவான அளவு நீரை தன்னகத்தே வைத்திருக்கும். அத்துடன், நமக்கு நிழலை தந்து குளிர்ச்சியை தருவதும் இம்மரங்களே ஆகும்.
மேலும், பார்ப்போமானால் பல்லாயிரக்கனக்கான வன ஜீவராசிகளின் உறைவிடமாக இம்மரங்களே திகழ்கின்றன.
பறவைகளின் வதிவிடமாக மரப்பொந்துகளும் கிளைகளிலே அமைக்கப்பட்ட கூடுகளும் அவற்றின் பாதுகாப்பிற்கு ஏற்றாற் போல குடிகளை அமைத்துக்கொள்ள உதவுகின்றன.
அதுமட்டுமல்லாமல், மரவேர்களால் உருவாகியுள்ள குகை போன்ற பொந்துகளும் இலைகளும் கூட பிராணிகளின் இருப்பிடமாக இருக்கின்றன.
மனிதர்களுக்கு உணவுத் தேவையை பூர்த்தி செய்வதே இம்மரங்கள் ஆகும்.
ஆம்! இலை, கிளை, தண்டு, பூ, காய், பழங்கள், தானியங்கள் வேர் என பல்வேறு வகையில் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் பெருமை இந்த மரங்களுக்கே உண்டு.
மனிதனுக்கு மட்டுமன்றி பறவைகள், மிருகங்கள், பூச்சிப் புழுக்கள் என அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து உயிர் வாழவைப்பன இம்மரங்களே ஆகும்.
நாம் இன்னும் விரிவாகப் பார்ப்போமானால், மருத்துவ தேவைகளைக் கூட பூர்த்தி செய்யும் வல்லமை வாய்ந்தனவாக மரங்கள் இருக்கின்றன என்பதில் எவ்வித மறுப்பும் இல்லை.
தாவரங்களில் பூக்கள், வேர்கள், இலைகள், மரப்பட்டைகள், தண்டுகள், விதைகள், தானியங்கள் மற்றும் பழங்கள் என சகலதுமே மருந்துப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன.
இயற்கை சூழலின் சமநிலையில் முக்கியப் பங்கு வகிப்பது உணவு சங்கிலி தான். இவ்வுணவுச் சங்கிலியில் முக்கிய ஏதுவாக “உற்பத்தியாக்கி” எனப் பெயர் கொண்டு சிறப்பிடம் பெறுவது தாவரங்களே ஆகும்.
மேலும், மனிதன் பொருளாதார ரீதியில் முன்னேற கூட மரங்களே உதவுகின்றன. தளபாடங்கள், கடதாசி, அழகுக்கலை பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை தயாரிப்பதற்கு மரங்கள் உதவுகின்றன.
அத்துடன், கட்டிட நிர்மானப் பனிகளுக்கும் மரங்கள் பெருமளவில் பயனபடுத்தப்படுகின்றன.
இவ்வாறான விதமாக மரங்களின் முக்கியத்துவங்கள் சிறப்பிடம் வகிக்கின்றன.
மரங்கள் அழிவடைவதால் ஏற்படும் பாதிப்புகள் – Grow a Tree in Tamil
இன்றைய உலகில் அபிவிருத்தி காரணமாக மரங்கள் எண்ணற்று ஏராளமாக அழிக்கப்படுகின்றன. கைத்தொழில்மயம், நகராக்கம் போன்ற காரணங்களினால் வரையறையின்றி மரங்கள் வெட்டப்படுகின்றன.
இதனால், சூழலின் சமநிலை முற்றிலும் பாதிக்கப்படுகின்றது என்றால் அது மிகையில்லை.
வெப்பம் அதிகரிப்பு, குறைவான மழைவீழ்ச்சி, வறட்சி, வன விலங்குகளின் வதிவிடம் குறைந்து நகர்புறமாக அலைதல், மண்சரிவு போன்றவாறான இன்னோரன்ன இயற்கை பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இவை அனைத்திற்கும் ஒரே காரணி மரங்கள் அழிக்கப்படுவதே ஆகும்.
எத்திசை நோக்கினாலும் கட்டிடங்களாக மாறியுள்ள இவ்வுலகில் மரங்களை நாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது என்றால் அதில் பொய்யில்லை.
இதையும் வாசியுங்கள்:
மானிட குலத்தின் பாதுகாப்பு அரணாக திகழ்வதே மரங்கள் தான். இத்தகைய அரண்களை அழித்தொழிப்பது மனித குலத்தை ஒழிப்பதற்கு சமமாகும் என்று சொன்னால் அதை மறுக்க முடியாது.
தேவைக்கு ஏற்ப மரங்களை பயன்படுத்தாது சுயநலமாக கணக்கு வழக்கின்றி அழிப்பதால் எதிர்காலத்தில் பூமியில் உயிர்கள் வாழ்வதே கடினம் என்ற சூழ்நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு.
அளவறிந்து தேவைக்கு ஏற்றவகையில் மரங்களை பயன்படுத்துவதோடு நிறுத்தாது மீள்நடுகை செய்து பசுமை புரட்சியை உருவாக்குவதனாலேயே புவியை எதிர்கால அனர்த்தங்களிலிருந்து காக்க முடியும்.
எனவே நாம் வீட்டுக்கு ஒரு மரத்தையாவது நட்டு பசுமை எண்ணத்தை ஏற்படுத்தி மரங்களை பாதுகாக்க வேண்டும்.
மரம் வளர்ப்போம் (Maram valarpom) பயன் பெறுவோம் என்பதோடு நிறுத்தி விடாமல் பசுமை புரட்சி செய்வோம் புவியை காப்போம் என்பதற்கிணங்க வாழ உறுதி எடுக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தாலே மரங்கள் பாதுகாக்கப்படும் என்பதை நாம் உறுதியாக கூறலாம்.
மேலும், இவ்வுறுதியை நாம் மட்டும் எடுத்துக் கொண்டு நிறுத்தாது நமது குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
மரங்கள் பற்றியும் மரப்பயன்பாடுகள், முக்கியத்துவங்கள் மற்றும் அழிவினால் ஏற்படும் அனர்த்தங்கள் என்பவற்றை அவர்களுக்கு புரியும் விதமாக அவர்களது பானியில் கற்றுகொடுத்து புரிய வைத்து மர நடுகைக்கு அவர்களையும் வழி நடத்த வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு சிறு வயதிலிருந்தே மரங்களிற்கு முக்கியத்துவம் கொடுத்து மர நடுகையை ஆரம்பிப்பர்.
இதனால் எம்மோடு மட்டும் நின்று விடாமல் தொடர்ந்து மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கை அவர்கள் மூலமாகவும் வழிநடத்திச் செல்லப்படும் என்பதை உறுதியாக கூற முடியும்.
ஆகவே மரம் வளர்ப்போம் (Maram valarpom); வளம் பெறுவோம்; நல்வாழ்வு வாழ்வோம்.
இதையும் வாசிப்போம்:
- தமிழ் மொழியின் சிறப்பு
- பாரம்பரியமான கிருமி நாசினிகள்
- ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com