இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil

Save nature in Tamil

இப்பூமியானது உயிர்பெற்று நிலைத்திருப்பதற்கான அடித்தளமான காரணம் இயற்கை (Iyarkai) என்று சொன்னால் மிகையில்லை.

ஏனெனில், உயிர் வாழத்தேவையான காற்று முதல் உணவு, உறையுள் உட்பட அனைத்தும் இவ்வியற்கையை சார்ந்தே காணப்படுகிறது.

அத்துடன், உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து விடயங்களும் இயற்கைக்குள் அடங்குகின்றன.

இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil) என்று நாம் எப்போதும் சிந்தித்து செயற்பட வேண்டும். அப்போது தான் இயற்கை வளங்களும் காப்பாற்றப்படும்: உலக சமநிலையும் பேணப்படும்.

இயற்கையின் சிறப்பு

இயற்கையின் சிறப்பினை பற்றி நோக்கின் இப்பூமியானது கடல், ஆறுகள், குளங்குட்டைகள், சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகள் என ¾ % மான நீர்ப்பரப்பினையும் மலைகள், காடுகள், சோலைகள், வயல் வெளிகள் என ¼ % மான பகுதி தரைப் பிரதேசத்தினையும் கொண்டு அமையப்பெற்றது.

அத்துடன், விலங்கினங்கள், பறவையினங்கள், பூச்சிப் புழுக்கள் என உயிரினப் பல்வகைமையை தனக்குள் அடக்கியுள்ளது இவ்வியற்கை.

இவ்வனைத்தையும் ஒன்றினைத்தே நாம் “இயற்கை” என ஓர்பெயர்க் கொண்டு அழைக்கிறோம்.

சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழக் கூடியு ஒரே கோள் பூமியாகும். இந்த பூமியில் எண்ணிலடங்காத இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

நாம் பயன்படுத்துகிற எந்த பொருளாக இருந்தாலும் அது இயற்கை வளம் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருளாகத் தான் இருக்கும். இயற்கை இல்லையென்றால் இவ்வுலகமே இருக்க முடியாது.

இத்தனை சிறப்பும் பெருமையும் வாய்ந்த இயற்கையினை பல்வேறு வழிகளில் மாசுபடுத்தியும் வளங்களை அழித்தும் தீங்குவிளைவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

இதையும் வாசியுங்கள்:

இயற்கை அழிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

Save nature in Tamil
Save nature in Tamil

பூமியில் சனத்தொகையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையால், இயற்கை பயன்பாடுகளும் அதிகரித்துச் செல்கின்றன.

இதனால், தனது தேவையை பூர்த்தி செய்வதற்காக மேற்கூறப்பட்ட சிறப்புக்கள் வாய்ந்த இயற்கையை சுயநலத்துடன் அழித்து வருகிறான் மனிதன்.

காடுகளை அழித்து கட்டிடங்களையும், மாடி வீடுகளையும், அடுக்கடுக்கான தொழிற்சாலைகளையும் உருவாக்குகிறான்.

இதனால் இயற்கையின் முதல் கருவான காடுகள் அழிந்து வளி, நீர் பற்றாக்குறை ஏற்படல், புவி வெப்பமடைதல் போன்ற சூழல் பிரச்சினைகள் உருவாகின்றன. அத்துடன், பிராணிகளும் பாதிக்கப்படுகின்றன.

மேலும், காடுகளை அழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதனால் இயற்கை (Iyarkai) அன்னையின் இன்னோர் குழந்தையான நீரும் அசுத்தமாவதோடு, வளியில் நச்சு வாயுக்கள் கலப்பதனால் வளி மாசடைவும் ஏற்படுகிறது.

இவ்வாறான முறைகளில் புவியில் இயற்கை மாசடைவு ஏற்படுகிறது.

இப்படியான மானிட செயற்பாடுகளால் எண்ணற்ற இயற்கை அனர்த்தங்கள் உருவாகின்றன. அதாவது, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வறட்சி போன்றவாறான இன்னல்கள் ஏற்படுகின்றன. 

காடுகளை வரையறையின்றி அழிப்பதனால் மழைவீழ்ச்சி அற்றுப்போய் அதிகபடியான வெப்பம் நிலவுகிறது. இதுவே, வறட்சியை உருவாக்குகிறது.

இதையும் வாசிக்க: 

கட்டிடங்களையும் குடியிருப்புகளையும் அமைப்பதற்கு பசுமையான காடுகளை அழித்து தரைப் பிரதேசங்களை பொருத்தமற்றவாறு தோன்றுவதாலும் முறையற்ற அகழ்வுகளாலும் மண்சரிவு அபாயம் ஏற்படுகிறது.

மேலும், கிருமிநாசினிகள், பூச்சிக் கொல்லிகள் போன்ற இரசாயணப் பயன்பாடுகள் காரணமாக நிலத்தின் இயற்கை வளத் தன்மை கெட்டு வளமற்றதாக மாறுகின்றது.

அத்துடன், பிளாஸ்திக், பொலித்தீன், இறப்பர் போன்றன மண்ணுடன் சேர்வதாலும் மண் தரமற்றுப்போகிறது.

முறையற்ற மனித ஏதுக்களால் இயற்கையானது மாசுபடுகின்றது என்றால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இயற்கையை பாதுகாக்கும் முறைகள்

இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனினதும் தலையாய கடமையாகும் என்பதில் எவ்வித மறுப்புமில்லை.

இயற்கையை அதிகப்படியாக பயன்படுத்தும் மனிதனே அதனை பாதுகாக்கவும் வேண்டும்.

தற்போது இயற்கை வளமானது அழிவடைந்துக் கொண்டே வருவதனால், ஊர் விட்டு ஊர் சென்றும் நாடு விட்டு நாடு சென்றும் சுற்றுலாவாக இயற்கையை கண்டு கழிக்க நேரிடும் காலமாக மாறிவிட்டது.

இந்நிலை வருங்காலத்தினருக்கு வர அனுமதிக்கக் கூடாது.

எனவே, இயற்கையை தனிமனிதன் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும். இயற்கை பாதுகாப்பு சட்டங்களை இறுக்கமாக்க வேண்டும்.

பொருத்தமற்ற சட்டங்களை சீர் அமைத்து மக்களுக்கு பொருத்தமான விதிகளை கொண்டு வர வேண்டும்.

ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்ற உணர்வு தோன்றுமாயின் காடுகள் அழியாது பாதுக்காக்கப்படும். காடுகள் பாதுகாக்கப்பட்டாலே இயற்கையை முழுமையாக காக்கலாம்.

இதையும் வாசியுங்கள்:

ஏனென்றால், மரம் என்பது இயற்கையின் மூச்சு என்று கூறலாம். காரணம் நிலம், நீர், காற்று ஆகிய பிரதான இயற்கை வளங்களை பாதுகாக்கும் சக்தி மரங்களுக்கே உள்ளது.  

அதனால் மரங்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். காடுகள் அழிக்கப்படுவதனாலேயே பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டு பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.

மேலும்,  இயற்கை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இயற்கையின் முக்கியத்துவம் பற்றி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேவைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டவாறு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவர் உள்ளத்திலும் தோன்றினாலே பாதி அழிவைத் தடுக்கலாம்.

ஏனெனில், நம்மோடு மட்டும் இவை அழிந்து போகாமல் எமது எதிர்கால சந்ததியினருக்கும் தேவை, அவர்களும் இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுவதே உத்தமமாகும்.

இதையும் வாசிப்போம்:

எனவே, இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil), உலகத்தை பலமாக்குவோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top