மரம் என்பது இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு கிடைத்த இன்றியமையாத இயற்கை வளம் ஆகும். நாம் உயிர் வாழ நிலம், நீர், காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இந்த மரங்கள் அவசியம் வாய்ந்தவையாகும்.
உண்மையாக சொன்னால், இவை எல்லாவற்றையும் பாதுக்காப்பதே இந்த மரங்கள் தான்.
நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகிய இவை மூன்றுக்கும் மூல ஆதாரமாக நாம் மரங்களையே பயன்படுத்துகிறோம்.
மரங்கள் என்றால் என்ன (What is a tree in Tamil) என்றும் மரங்கள் பற்றிய முக்கியமான தகவல்களையும் இனி பார்க்கலாம் வாருங்கள்.
மரம் என்றால் என்ன?
மரம் (Tree in Tamil) என்றால் இலைகளின் துணையுடன் நீண்ட நடுத்தண்டை கொண்ட பல ஆண்டுகள் வாழக்கூடிய தாவரம் ஆகும்.
பல மரங்கள் தண்டின் அங்கங்களாக கிளைகளை கொண்டிருக்கின்றன. சில மரங்கள் கிளைகள் இன்றியும் உயரமாக வளர்கின்றன. உதாரணமாக தென்னை மரம், பனை மரம், வாழை மரம் போன்ற மரங்களை குறிப்பிடலாம்.
மரங்கள் அவற்றின் உறுதிக்காக மர திசுக்களை கொண்டிருக்கின்றன. அத்துடன், பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு அவற்றின் தண்டை சுற்றி மரப்பட்டைகளை கொண்டுள்ளன.
மேலும், மூலப்பொருட்களை ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொண்டு செல்ல செல்குழாய் நாளம் சார்ந்த திசுக்களை தன்னகத்தே வைத்திருக்கின்றன.
பல வகையான மரங்கள் சூரிய ஒளியை பெறுவதற்கு ஏனைய மரங்களுடன் போட்டியிட்டு உயரமாகவும் பரவலாகவும் வளர தண்டும் கிளைகளும் அவற்றுக்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
மரத்தின் வரலாறு
ஏறத்தாழ 1 பில்லியன் வருடங்களுக்கு முன்னதாக உலகில் பாசி போன்ற தாவரங்களே முதன் முதலில் தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.
எனினும், நிலத்தாவரங்கள் ஏறத்தாழ 850 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பச்சைப் பாசி குழுவிலிருந்து தோன்றியுள்ளன.
நிலத் தாவரங்களுக்கு மிக நெருங்கிய இனமாக சரோபைட்ஸ் (Charophytes) எனும் பச்சைப் பாசி குழுவையை குறிப்பிடலாம். அதில் விஷேடமாக சாரல்ஸ் (Charales) எனும் பச்சைப் பாசி பிரிவையை குறிப்பிட முடியும்.
ஏனென்றால், ஆழமற்ற நன்னீரில் வாழ்ந்த கிளையுடைய இழை பாசியிலிருந்து நிலத் தாவரங்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வு சாரல்ஸ் பச்சை பாசியின் பரம்பரை மாற்றங்களிலிருந்து மாற்றப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது
எனினும், 400 மில்லியன் வருடங்களுக்கு முன்பு லைகோபைட்ஸ் (Lycophytes), ஃபேர்ன்ஸ் (Ferns) மற்றும் ஹோர்ஸ்டெயில்ஸ் (Horsetails) ஆகிய தாவரங்கள் தோன்றியதற்கான புதைவடிவ ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், இந்த தாவர இனங்களில் விதைகள் இருக்கவில்லை. ஆனால் இவற்றில் செல்குழாய்நாளஞ் சார்ந்த அமைப்பு காணப்பட்டுள்ளன.
380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது விதைக்கப்பட்ட தாவரங்கள் தோன்றியுள்ளன. அத்துடன், இந்த விதைகள் புறத்தோல் இல்லாமல் மிக சாதாரணமானதாகவே இருந்துள்ளன.
தண்டுடன் கூடிய மரங்கள் 360 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தண்டுகள் உயரமாக வளர்வதற்கு துணை புரிந்துள்ளதோடு, நீர் கடத்தலை செம்மைப்படுத்தியுள்ளன.
200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஜிம்கோ (Ginkgo) எனும் விசிறி மர வகை தோன்றியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
பைன் (Pine) எனும் மரங்கள் 150 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக தோன்றியிருக்கிறன.
இந்த உலகின் பூ பூக்கும் முதலாவது மரம் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 67 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மேப்ல் (Maple) வகை மரங்களும் 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக ஓக் மரமும் தோன்றியுள்ளன.
இவை எல்லாவற்றுக்கும் பிறகு தான் நாம் தற்போது பார்க்கும் அனைத்து மரங்களும் உருவாகியுள்ளன.
மரத்தின் பாகங்கள்
மரம் (Tree in Tamil) என்று நாம் கூறும் போது, பல பாகங்கள் இணைந்து ஒரு முழு மரம் உருவாகிறது. மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு செயற்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இனி, நாம் மரத்தின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
வேர்
வேர் என்பது ஒரு மரத்தின் நிலத்திற்கு கீழ் படர்ந்திருக்கும் பகுதியை குறிக்கும்.
வேரின் முதல் செயற்பாடு மரத்தை வலுவாக தாங்கி பிடித்தல் ஆகும். மேலும், மரத்திற்கு தேவையான நீர் மற்றும் கனியுப்புகளை உரிஞ்சுவது அதன் இன்னொரு முக்கிய பணியாகும்.
மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த வேர்களே நீரையும் சேமித்து வைக்கின்றன.
வேர்களில் ஆணி வேர், பக்க கிளை வேர், நுண்ணிய வேர் என பல வேர் வகைகள் உள்ளன.
தண்டு
மரத்தண்டானது மரக்கிளைகள், இலைகள், கனிகள் போன்ற அனைத்தையும் வ்லிமையுடன் தாங்கி நிற்கிறது. மேலும் மரத்தண்டினூடாகவே நீரும் கனியுப்புகளும் மரம் (Tree in Tamil) முழுவதும் பயணிக்கின்றன. அத்துடன் மாப்பொருளையும் கடத்துகிறது.
கிளை
இலைகள், பூக்கள், மற்றும் காய்கள் போன்றவற்றை கிளைகள் தாங்கிப் பிடிக்கின்றன. அத்துடன், நீர், கனிமங்கள ஆகியவற்றை இலைகளுக்கு கொண்டுசெல்கின்றன.
மேலும், இலைகளால் உற்பத்தி செய்யப்படும் மேலதிக உணவை அவை எதிர்கால தேவைக்காக சேமித்துவைக்கின்றன.
இலை
இலைகளினூடாகவே மரத்திற்கான உணவு உற்பத்தி நடைபெறுகிறது. அதாவது, ஒளித்தொகுப்பு செயற்பாடு நிகழ்கிறது.
இதன்போது, இலைகள் காபனீரொக்சைட்டையும் நீரையும் கொண்டு சூரிய ஒளியின் மூலமாக மாப்பொருளையும் ஒட்சிசனையும் தயாரிக்கின்றன.
பூ, பழம் மற்றும் விதை
பூ, பழம் மற்றும் விதை ஆகியவற்றின் முதன்மையான செயற்பாடு இனப்பெருக்கமாகும். ஒரு மரம் உருவாவதற்கு விதையினை பெற முதற்படியாக பூ மலர்கிறது.
பூவினுள் மகரந்தச் சேர்க்கை எனும் செயற்பாடு நடந்து, அந்த பூவானது கருவுறுகிறது. அந்த கரு படிப்படியாக வளர்ந்து காயாகி பின்பு பழமாகிறது.
அதனைத் தொடர்ந்து, அந்த பழத்திலிருந்து விதை பெறப்படுகிறது. பெறப்படும் அந்த விதையின் மூலமாக புதிய ஒரு மரம் முளைக்கிறது.
மரத்தின் வாழ்க்கை சுழற்சி
பெரும்பாலான மரங்கள் மூடப்பட்ட விதைகளை (Angiosperm) கொண்டவையாகவும் பலமான தண்டை கொண்ட மரங்களாகவும் இருக்கின்றன. அத்துடன், இவை பூ பூக்கக்கூடிய தாவரங்கள் ஆகும்.
சில தாவரங்கள் விதையுறை அல்லாத விதைகளை (Gymnosperm) கொண்டவையாகவும் மென்மையானவையாகவும் இருக்கின்றன. இவ்வகை தாவரங்களில் பூ மலர்வதில்லை.
விதையில் ஒரு மரம் (Maram in Tamil) ஆரோக்கியமாக முளைப்பதற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கியிருக்கும்.
ஒரு விதை முளைக்க தயாரகும் போது முதலில் அந்த விதையிலிருந்து வேர் உருவாகி நிலத்தை பிடித்துக்கொள்கிறது. அதன்பின் விதைக்கு தேவையான நீரை நிலத்திலிருந்து உறிஞ்ச ஆரம்பிக்கிறது.
இதற்கு பிறகு, அந்த விதையிலிருந்து அரும்பு தோன்றும். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இளஞ்செடியாகிறது.
இவ்வாறு வளரும் செடி பருவமடைந்து மரமாகி இனப்பெருக்கத்திற்கு தயாராகிறது. இந்நிலையில் அந்த மரமானது பூ பூக்க ஆரம்பிக்கும். அதன் பின்பு காய் காய்த்து கனியிலிருந்து மீண்டும் விதை பெறப்படும்.
இவ்வாறு இந்த செயற்பாடானது தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கும். பல வருடங்களுக்கு பிறகு அந்த மரம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைய ஆரம்பிக்கும். அப்படியே அந்த மரம் முழுமையாக இறக்கிறது.
இப்படியான முறைகள் மூலம் மரத்தின் வாழ்க்கை சுழற்சி மீண்டும் மீண்டும் நடந்துக்கொண்டிருக்கிறது.
மரங்களைப் பாதுகாக்கும் முறைகள்
மரம் (Maram in Tamil) மனிதனுக்கு மட்டுமன்றி இந்த உலகில் வாழ்கின்ற எல்லா உயிரினங்களும் உயிர் வாழ மிக அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. மரத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு வரியில் சொன்னால் மரம் இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்று மரத்தின் சிறப்பை கூறலாம்.
ஆம்! மரங்கள் பல நன்மைகளை இந்த உலகுக்கு வாரி வழங்குகின்றன. அப்படிப்பட்ட மரங்களை நாம் பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் நாம் மர நடுதலை அதிகப்படுத்தவேண்டும். குறிப்பாக, ஒருவர் ஒரு மரத்தையாவது கட்டாயமாக நடவேண்டும் என்ற உணர்வை அனைவரின் மனதிலும் ஏற்படுத்த வேண்டும்.
ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது நட்டால் மரங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரும்.
ஒரு கவலைக்குறிய விடயம் என்ன என்று பார்த்தால் அது காடழிப்பு தான். நகர அபிவிருந்தி என்ற அடிப்படையில் காடுகள் அழிக்கப்படுவதை முற்றாக தடுக்கவேண்டும்.
ஏனென்றால், ஏற்கனவே பல காடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள காடுகளையாவது நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில், நமது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
மேலும், மரப்பாவணையை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். அதாவது, மரம் (Maram in Tamil) வெட்டப்பட்டு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை உபயோகிக்க நாம் பழக வேண்டும்.
அத்துடன், மரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து பகுதிகளிலும் அதிகரிக்க வேண்டும்.
மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டாலே நமது சுற்றுச் சூழல் மேலும் ஆரோக்கியமடையும்.
ஒரு மரத்தின் பூ, காய், பழம், இலை, பட்டை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். உண்மையாக சொன்னால் மரங்கள் தங்களையே இந்த உலகத்துக்காக அர்ப்பணிக்கின்றன. அவை இறந்தாலும் இந்த மண்ணுக்கு உரமாக மாறுகின்றன.
ஆனால், மரத்துக்காக நாம் என்ன செய்துள்ளோம் என்று சிந்தித்து பார்த்தால் அதற்கு நம்மிடம் சரியான பதில் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆகவே, நாம் அனைவரும் மரம் வளர்ப்பதில் மேலும் அதிக அக்கரை காட்டவேண்டும்.
இதையும் வாசியுங்கள்:
தற்போது மரம் (Tree in Tamil) பற்றிய தெளிவான விளக்கங்களை நாம் பார்த்தோம். பல வகைகளிலும் பயன் தரும் மரங்கள் இயற்கையின் விலைமதிக்க முடியாத செல்வமாகும்.
எனவே, மரங்களை வளர்ப்போம்; இயற்கையை பாதுகாப்போம்; உலகை வாழ வைப்போம்.
Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com